மாதாந்தம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது பல தனித்துவமான வசதிகளையும் தன்னகமாக கொண்டுள்ளது.

பேஸ்புக் மெசெஞ்சர் வசதிகள்


அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமான ஏராளமான வசதிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

அதேபோன்று உங்கள் அன்புக்குரிய ஒருவரை ஆச்சரியப்படுத்துவதற்கான ஒரு வசதியும் மெசெஞ்சர் செயலியில் மறைந்துள்ளது.

அன்பிற்கு அடையாளமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற இதய இமொஜியை பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் உங்கள் அன்புக்குரியவருக்கு அனுப்புவதன் மூலம் அவைகள் கீழிருந்து மேலாக பறந்து செல்வது போன்ற ஒரு காட்சியை பேஸ்புக் மெசெஞ்சரில் ஏற்படுத்த முடியும். (அனுப்பும் போது உங்களாலும் அதனை காணலாம், பார்க்கும் போது அவராலும் அதனை காணலாம்)

இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீலுள்ள இனைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்க.


மேலும் குறிப்பிட்ட இமொஜியை உங்கள் கீபோர்டு செயலியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கூகுள் இன்டிக் கீபோர்ட் உட்பட இன்னும் பெரும்பாலான கீபோர்ட் செயலிகளில் இந்த இமொஜி தரப்பட்டுள்ளது.
குறிப்பு:
பேஸ்புக் மெசெஞ்சரில் தரப்பட்டுள்ள இதய இமொஜியை அனுப்பிய போது மேற்குறிப்பிட்ட விளைவு ஏற்படவில்லை. எனவே கீபோர்ட்டில் தரப்பட்டுள்ள இதய இமொஜியை அனுப்புக.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top