கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளமானது ஸ்மார்ட்போன்களுக்கான மிகச்சிறந்த ஒரு இயங்குதளமாகும்.

Android Nougat


இதன் ஒவ்வொரு புதிய பதிப்பும் புதுப்புது இனிப்புப் பண்டங்களால் பெயர் குறிக்கப்படுவது அனைவரும் அறிந்த விடயமே ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைபடி பெயரிடப்பட்டு வரும் இதன் பதிப்பில் இறுதியாக வந்ததும் தற்பொழுது பயன்பாட்டில் இருப்பதும் "மார்ஷ்மல்லோ" எனும் பதிப்பாகும்.

அந்தவகையில் இது வரை முழுமையாக அறிமுகப்படுத்தப்படாது "ஆண்ட்ராய்டு N" என அறியப்பட்டு வந்த பதிப்புக்கு "ஆண்ட்ராய்டு நௌக்கட்" எனும் பெயரை தீர்மாந்த்துள்ளது கூகுள் நிறுவனம்.


இதற்கு முன்னர் வெளிவந்த பதிப்புக்களுக்கு கூகுள் சுயமாகவே அதன் பெயரை தீர்மானித்து வந்ததுடன், "N" எழுத்தில் துவங்கும் இந்த பதிப்பின் பெயரை தீர்மானிப்பதற்கு கூகுள் நிறுவனம் மக்களின் கருத்துக்கணிப்பு முறை ஒன்றை உருவாக்கியிருந்தது.

எனவே இந்த பெயரானது மக்களின் கருத்துக்கள் மூலம் தீர்மானிக்கப்பட முதல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் என்றும் குறிப்பிடலாம்.


தொடர்புடைய இடுகை:


இதன் பெயர் நெய்யப்பம் என்றே வைக்கப்படும் என அநேகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. (நினைப்பதெல்லாம் நடந்தால் வாழ்க்கை சுவார்ஷ்யமானதாக அமையாதல்லவா?)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top