அழைப்புக்கள் வரும் போது அழைப்பவரின் பெயரை கூறும் படி அமைத்துக் கொள்வதற்கான வசதி ஆரம்ப நோக்கிய மொபைல் சாதனங்களில் வழங்கப்பட்டிருந்தமை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அழைப்பவரின் பெயரை கூற


என்றாலும் இன்று அறிமுகப்படுத்தப்படும் அநேகமான ஸ்மார்ட்போன்களில் அவ்வாறான வசதி இல்லை என்று தான் கூற வேண்டும்!


இருப்பினும் மூன்றாம் நபர் செயலியை பயன்படுத்தி அவ்வாறான வசதிகளை எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தவகையில் அழைப்புக்கள் வரும் போது அழைப்பவரின் பெயரை ஒலி எழுப்புவதன் மூலம் அறிந்துகொள்ள உதவுகிறது ஹூஸ் காலிங் எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி.

கீலே வழங்கப்பட்டுள்ள இனைப்பு மூலம் இதனை இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த செயலியில் தரப்பட்டுள்ள மேலதிக வசதிகள்

  • உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள பெயர்களை மாத்திரம் அல்லாது புதிய இலக்கங்களில் இருந்து அழைப்புக்கள் வரும் போது அந்த இலக்கங்களையும் ஒலிக்கச் செய்ய முடியும்.
  • குறுஞ்செய்திகள் பெறப்படும் போது அவற்றை அனுப்பியவரின் பெயரையும் ஒலிக்கச்செய்ய முடியும்.தொடர்புடைய இடுகை:


  • தேவையான செயலிகளை தெரிவு செய்து அவற்றில் இருந்து பெறப்படும் நோட்டிபிகேஷன் போன்றவற்றையும் ஒலிக்கச்ச் செய்யலாம்.

  • மேலும் சேமிக்கப்பட்டுள்ள பெயர்களுக்கு பதிலாக நீங்கள் விரும்பும் வேறு பெயர்களை ஒலிக்கச் செய்யவும் இயலும்.

இவைகள் தவிர மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top