சாம்சங் நிறுவனம் ஒரு அட்டகாசமான எஸ்.எஸ்.டி நினைவகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் எஸ்.எஸ்.டி நினைவகம்


512 ஜிபி வரையான நினைவகத்தை கொண்டுள்ள இது சராசரியான ஒரு முத்திரையின் அளவை விடவும் சிறிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


PM971-NVMe என பெயர் குறிக்கப்பட்டுள்ள இது வெறும் 20 மில்லிமீட்டர் நீளம், 16 மில்லிமீட்டர் அகலம் 1.5 மில்லிமீட்டர் தடிப்பு போன்றவற்றை கொண்டுள்ளது.


சாதாரண ஒரு சாட்டா எஸ்.எஸ்.டி (SATA SSD) நினைவகத்தை விட மூன்ற மடங்கு செயல்திறனுடன் இயங்கும் இது ஒரு கிராம் நிறையை மாத்திரமே கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் செக்கனுக்கு 1,500MB வேகத்தில் தரவுகளை வாசிக்கவும் செக்கனுக்கு 900MB வேகத்தில் தரவுகளை எழுதவும் முடியும். அதாவது 5 ஜிபி அளவுடைய ஒரு வீடியோ கோப்பை வெறும் 3 செக்கன்களில் இதில் சேமித்து விட முடியும்.

128 ஜிபி, 256 ஜிபி, மற்றும் 512 ஜிபி ஆகிய வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கடும் இவைகள் அடுத்த மாதமளவில் விற்பனைக்கு விடப்படவுள்ளன.

எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்ட மிகவும் மெலிதான மடிக்கணினிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Love to hear what you think!

1 comments:

 
Top