வாட்ஸ்அப் மெசெஞ்சரில் மறுமொழி (Reply) கூறுவதற்கு புதியதொரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியானது வாட்ஸ்அப் மெசெஞ்சர் மூலம் அடிக்கடி அரட்டைகளை மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.


தனி ஒரு நபருடன் அரட்டையில் ஈடுபடும்போது அவர் முன்பு கேட்ட ஒரு கேள்விக்கு விடையளிக்க இந்த மறுமொழி பட்டனை பயன்படுத்தலாம்.

மேலும் குழு அரட்டையின் போது ஒருவரது கருத்துக்கு மறுமொழி தெரிவிக்கவும் இந்த வசதி மிகவும் பயன்படுகிறது.

இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் மேம்படுத்தப்படவில்லை எனினும் கீலே வளங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் APK கோப்பை தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிறுவுவதன் மூலம் வாட்ஸ்அப் மெசெஞ்சரை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் தனி நபர் அரட்டையின் போது நீங்கள் தெரிவிக்கும் மறுமொழியை பெற்றுக்கொண்டவர் படித்துவிட்டாரா? என்பதை அறிந்து கொள்ள முடிவதுடன் குழு அரட்டையின் போது நீங்கள் தெரிவித்த மறு மொழியை யார் யார் படித்துள்ளார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு மறுமொழி தெரிவிப்பது எப்படி?

முதலில் பதிவில் வழங்கியுள்ள இணைப்பு மூலம் வாட்ஸ்அப் மெசெஞ்சரை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்க.

பின்னர் மறுமொழி தெரிவிக்க வேண்டிய செய்தியை தொடர்ச்சியாக அலுத்துக.
இனி மறு மொழி தெரிவிப்பதற்கான ஒரு அம்புக்குறி அடையாளம் வாட்ஸ்அப் செயலியின் இடது மேல் பகுதியில் தோன்றும். பின் அதனை சுட்டுவதன் மூலம் அந்த செய்திக்கு மறுமொழி தெரிவிக்கலாம்.
தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top