வாட்ஸ்அப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்கள் இல்லை என்றே கூற வேண்டும்.பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வாட்ஸ்அப் சேவையானது எமது தனிப்பட்ட தகவல்களை கொண்டிருப்பதால் அதனை மிக பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது சிறந்ததாகும்.


அந்தவகையில் எமது ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்அப் மெசெஞ்சரை ஏனையவர்களால் அணுக முடியாதவாறு பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள உதவுகிறது வாட்ஸ்லாக் எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி.

இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியை கடவுச்சொல் இட்டு பாதுகாக்க முடிவதுடன் மேலதிக பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் போன்றதொரு போலியான இடைமுகத்தை தோன்றச் செய்யவும் முடியும். (இதனை தரவிறக்குவதற்கான இணைப்பு கீலே வழங்கப்பட்டுள்ளது)

வாட்ஸ்லாக் செயலியின் மேலதிக பயனுள்ள வசதிகள்:

  • இது வாட்ஸ்அப் செயலிக்கு என பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இதன் மூலம் ஏனைய செயலிகளையும் கடவுச்சொல் இட்டு பாதுகாத்திட முடியும்.


  • கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் செட்டிங்க்ஸ் போன்றவற்றையும் ஏனையவர்களால் அணுக முடியாதவாறு அமைத்துக்கொள்ள முடியும்.
  • வாட்ஸ்அப் செயலியின் உண்மையான ஐகான் (iCon) இற்கு பதிலாக போலியான ஒரு ஐகான் ஒன்றை வழங்க முடிவதுடன் உண்மையான  இடைமுகத்திற்கு பதிலாக போலியான ஒரு இடைமுகத்தை வழங்கவும் முடியும்.


  • வாட்ஸ்லாக் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து மறைத்துக்கொள்ள முடியுமான அதேநேரம் # குறியீட்டுடன் குறிப்பிட்ட செயலிக்கு நீங்கள் வழங்கியுள்ள கடவுச்சொல்லை Dial செய்வதன் மூலம் அதனை உங்களால் மாத்திரம் திறந்து கொள்ளவும் முடியும்.


  • மேலும் இரு நட்சத்திர குறியீடுகளுடன் ** கடவுச்சொல்லை Dial செய்வதன் மூலம் வாட்ஸ்லாக் செயலியை இயக்கச்செய்யவும் அதன் செயற்பாட்டை துண்டிக்கவும் முடியும்.

மேற்குறிப்பிட்ட வசதிகளை இலவசமாக பெற முடியும் என்றாலும் வாட்ஸ்அப் புகைப்படங்களை கேலரியில் தோன்றாதவாறு மறைப்பதற்கும் மேலும் சில வசதிகளை பெற்றுக்கொள்வதற்கும் இதன் ப்ரீமியம் பதிப்பை கட்டணம் செலுத்தி பெறவேண்டும். என்றாலும் ஒரு சாதாரண பயனருக்கு இதன் இலவச பதிப்பில் வழங்கப்படும் வசதிகள் போதுமானது.


நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்!
குறிப்பு:
இந்த செயலி மூலம் உருவாக்கப்படும் போலியான வாட்ஸ்அப் இடைமுகத்தை நீக்கிக் கொள்ள அதன் வலது மேற்பகுதியில் புதிய செய்திகளை உருவாக்குவதற்கான குறியீட்டை தொடர்ச்சியாக மூன்று முறை சுட்ட வேண்டும்.

தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top