உறவினர்கள் நண்பர்களுக்கு அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் அரட்டை அடிப்பதற்கும் என பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் சேவைகளுள் வைபர் சேவையும் பிரபலமான ஒன்றாகும்.

வைபர் செய்திகளை மீட்பது எப்படி?


இதில் அனுப்பிய செய்தியை நண்பரின் ஸ்மார்ட்போனிலிருந்தும் அழித்துக்கொள்வதற்கான வசதி உட்பட இன்னும் ஏராளமான பல விரும்பத்தக்க வசதிகள் தரப்பட்டுள்ளன.

அந்த வகையில் வைபர் மெசெஞ்சர் மூலம் எமக்கு வரக்கூடிய செய்திகளை கூகுள் டிரைவ் சேமிப்பகத்தில் சேமித்துக்கொள்ளவும் தேவைப்படும்போது அவற்றை மீண்டும் வைபர் செயலிக்கு பெற்றுக்கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் வைபர் மெசெஞ்சரில் உள்ள ஒரு செய்தியை நீங்கள் தவறுதலாக நீக்கியிருந்தாலும் கூட அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

எனினும் இந்த வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ள வைபர் செயலியில் புதிய பதிப்பை நிறுவியிருக்க வேண்டும். (தரவிரக்க இணைப்பு கீலே வழங்கப்பட்டுள்ளது)


இதன் புதிய பதிப்பை நிறுவிய பின்னர் வைபர் செயலியின் இடது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள மெனு பட்டனை சுட்டும் போது பெறப்படும் சாளரத்தில் Settings > Viber Backup என்பதை சுட்ட வேண்டும்.
இனி பெறப்படும் சாளரத்தில் உள்ள Settings என்பதை சுட்டுவதன் மூலம் உங்களின் கூகுள் கணக்குடன் வைபர் கணக்கை இணைக்க முடியும்.அவ்வாறு இணைக்கப்பட்டதன் பின்னர் Backup என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் வைபர் தகவல்களை கூகுள் டிரைவ் சேமிப்பகத்துக்கு தரவேற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் வைபர் செயலியை நீக்கிவிட்டு அதை மீண்டும் நிறுவும் போதோ அல்லது புதியதொரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போதோ நீங்கள் ஏற்கனவே இழந்த வைபர் தகவல்களை இந்த வசதி மூலம் மீள பெற்றுக்கொள்ளலாம்.
மீள பெற்றுக்கொள்வதற்கு, மேற்குறிப்பிட்ட முறையில் நீங்கள் Backup செய்த பின்னர் Settings > Viber Backup பகுதிக்கு சென்று Restore என்பதை சுட்டுவதன் மூலம் இழந்த வைபர் தகவல்களை மீள பெற்றுக்கொள்ளலாம்.


குறிப்பு:

வைபரில் Delete For Myself என்பதன் மூலம் நாம் அனுப்பிய தகவல்களை எமது போனில் இருந்து மாத்திரம் நீக்க முடிவதுடன் Delete For Everyone என்பதன் மூலம் அந்த தகவலை நண்பரின் போனில் இருந்தும் எம்மால் நீக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட முறைகளில் முதலாவது குறிப்பிட்ட முறையில் (Delete For Myself) நீக்கிய தகவல்கள் மாத்திரமே வைபர் செயலிக்கு மீள உள்வாங்கப்படும்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top