குரல் கட்டளைகளை பயன்படுத்தி எமது ஸ்மார்ட்போன் மூலம் ஏராளமான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

கூகுள் நவ் குரல் கட்டளைகள்


இதற்கென பல்வேறு சேவைகள் இருந்தாலும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் நவ் எனும் சேவையானது சிறந்த வசதிகளை தரக்கூடியதும் அதிகமானவர்களால் பயன்படுத்தக் கூடியதும் ஆகும்.


அந்தவகையில் எமது ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் நவ் செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை எமது முன்னைய பதிவுகள் மூலம் விளக்கியிருந்தோம்.

அதேபோல் கூகுள் நவ் சேவையின் மூலம் வெவ்வேறுபட்ட வசதிகளை பெற்றுக்கொள்ள எவ்வாறான குரல் கட்டளைகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முழுமையான பட்டியலை தருகிறது ஓகே கூகுள் எனும் இணையதளம்.


அழைப்புக்களை மேற்கொள்வதற்கு, குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு, காலநிலை தகவல்களை அறிவதற்கு, மொழிமாற்றல்களுக்கு, கணித்தல் செயற்பாடுகளுக்கு, செயலிகள் மூலம் வெவ்வேறு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு என ஏராளமான குரல் கட்டளைகள் இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்றவகையிலும் மிகவும் இலகுவாக குரல் கட்டளைகளை தேடிப்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தளத்துக்கு நீங்களும் ஒருமுறை விஜயம் செய்துதான் பாருங்களேன்.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top