HI






வேகமாக இயங்கும் இன்றைய உலகில் ஒரே நேரத்தில் பல்வேறு விடயங்களை மேற்கொண்டு தமது நேரத்தை மீதப்படுத்தவே அனைவரும் விரும்புகிறார்கள்.




அந்தவகையில் இன்று எமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் குறிப்பிட்ட ஒரு அளவு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது.



எனவே நாம் ஸ்மார்ட்போன்கள் மூலம் வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்கு செலவிடும் நேரத்தில் ஏனைய விடயங்களையும் மேற்கொள்ள உதவுகிறது வி.எல்.சி மீடியா ப்ளேயர் செயலியின் புதிய பதிப்பு.

அதாவது நீங்கள் வி.எல்.சி மீடியா ப்ளேயர் மூலம் வீடியோ கோப்புக்களை பார்க்கும் போது அவற்றை சிறியதொரு சாளரத்தில் (Popup Window) இயங்கச் செய்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.

இவ்வாறு இயங்கச் செய்வதன் மூலம் உங்களால் குறிப்பிட்ட வீடியோ கோப்புக்களை பார்த்தவாறே பேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவது உட்பட எந்த ஒரு செயற்பாட்டையும்  உங்கள் ஸ்மார்ட்போனில் மேற்கொள்ள முடியும். மேலும் அதனை திரையின் தேவையான பகுதிகளுக்கு நகர்த்தவும் முடியும்.

இந்த செயலியின் புதிய பதிப்பை கீலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் தரவிறக்கி பயன்படுத்தலாம்.


வீடியோ கோப்புக்களை Popup சாளரத்தில் இயங்கச்செய்வது எப்படி?


 1. VLC மீடியா ப்ளேயர் மூலம் நீங்கள் வீடியோ கோப்புக்களை இயக்கும் போது குறிப்பிட்ட செயலியின் கீழ்பகுதியில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கொண்ட பட்டனை சுட்ட வேண்டும்.




2. இதன் போது தோன்றும் சிறிய சாளரத்தின் இடது கீழ் பகுதியில் உள்ள Popup சாlaரத்துக்கான குறியீட்டை சுட்டுவதன் மூலம் அதனை சிறியதொரு Popup சாளரத்தில் இயங்கச்செய்ய முடியும்.




அத்துடன் VLC மீடியா ப்ளேயர் செயலியானது வீடியோ கோப்புக்களுக்கு Subtitle இடுவதற்கான வசதி உட்பட மேலும் பல வசதிகளை கொண்டு புதிப்பிக்கப்பட்டுள்ளது.




நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்!


குறிப்பு:
இந்த வசதி ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள வீடியோ ப்ளேயர் செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் வி.எல்.சி மீடியா ப்ளேயர் மூலம் அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் இயக்க முடிவதுடன், ஏற்கனவே இருக்கும் வீடியோ ப்ளேயர் செயலியை விட  சிறந்த வசதிகளையும் தருகிறது


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

1 comments:

 
Top