இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் எமது தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்றார்போல் கீபோர்ட் செயலிகளை நிறுவி பயன்படுத்த முடிகிறது.அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏராளமான கீபோர்ட் செயலிகள் தரப்பட்டுள்ளன.


அவ்வாறான கீபோர்ட் செயலிகளுள் க்ரூமா எனும் கீபோர்டு செயலியும் சிறந்த வசதிகளை தருகிறது.


தமிழ் மொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை இதன் மூலம் தட்டச்சு செய்ய முடிவதுடன் இரவு நேரங்களில் பயன்படுத்தும் போது கண்களுக்கு சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நைட் மூட் எனும் வசதியையும் இது  தருகிறது.

ஆரம்பத்தில் கட்டணம் செலுத்தியே பெற வேண்டி இருந்த இதனை தற்பொழுது இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. (தரவிரக்க  சுட்டி கீலே வழங்கப்பட்டுள்ளது)


மேலும் நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கு ஏற்றவாறான நிறத்திற்கு இந்த செயலியின் நிறம் தாகவே மாற்றப்படுவது இதன் விசேட அம்சமாகும்.


மேற்குறிப்பிட்ட அனைத்து வசதிகளையும் இலவசமாகவே பெற முடிவதுடன் கட்டணம் செலுத்துவதன் மூலம் மேலதிக பல வசதிகளையும் ஏற்றுக்கொள்ள முடியும்.மறுபக்கம்:

இதன் மூலம் தமிழ் மொழியை தட்டச்சு செய்யும் போது Tamill99 முறையில் தட்டச்சு செய்ய முடிகிறது. எனினும் ஒலிப்பு முறையில் தமிழ் மொழியை தட்டச்சு செய்வதற்கான வசதி இதில் தரப்பட்டிருந்தாலும் அது கூகுள் இண்டிக் டூல்ஸ் போன்று சிறப்பாக இயங்கவில்லை (இது விரைவில் சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்)
தொடர்புடைய இடுகை:


இந்த செயலியை பயன்படுத்துவது தொடர்பிலோ அல்லது இந்த பதிவு தொடர்பான சந்தேகங்களோ இருந்தால் கீழுள்ள கருத்துரை பெட்டி மூலம் வினவலாம், மேலும் பதிவு தொடர்பான உங்கள் ஏனைய கருத்துக்களையும் வரவேற்கிறோம்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top