எமது ஸ்மார்ட்போன்களில் தரப்பட்டுள்ள கேமரா செயலியை விட மூன்றாம் நபர் கேமரா செயலிகளை பயன்படுத்தும் போது சற்று வித்தியாசமான மேம்பட்ட வசதிகளை பெற முடிகிறது.

செல்பி கேமரா மொபைல்


அந்தவகையில் BestMe Selfie எனும் செயலியானது அழகிய செல்பி புகைப்படங்களை பிடிக்க உதவுகிறது.


இந்த செயலி மூலம் நீங்கள் செல்பி புகைப்படங்களை பிடிக்கும் அதேநேரம் உங்கள் புகைப்படங்களுக்கு 100 க்கும் மேற்பட்ட அழகிய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வசதி இதில் தரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படுத்த முடியுமான இதனை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.


மேலும் நீங்கள் புகைப்படங்களை பிடிக்கும் போது திரையை தொடுவதன் மூலமோ அல்லது Volume பட்டனின் மேற்பகுதியை அழுத்துவதன் மூலமோ புகைபடங்களை பிடிக்க முடியும்.

மேலும் திரையை இருமுறை தொடுவதன் மூலம் (Double Tap) முன் கேமராவில் இருந்து பின்பக்க கேமராவையும் பின்பக்க கேமராவில் இருந்து முன் கேமராவையும் இயக்க முடியும்.

அத்துடன் ஒரு புகைப்படத்தில் உங்களது பல புகைப்படங்கள் இடம்பெறும் வகையிலும் இதன் மூலம் புகைப்படங்களை பிடிக்க முடியும்.

இவைகள் தவிர இமொஜிகள், ஓட்டுக்கள் (stickers) போன்றவற்றையும் நீங்கள் பிடிக்கும் புகைப்படங்களுக்கு சேர்த்துக்கொள்ள முடியும்.

மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்தித்தான் பாருங்களேன்.


BestMe Selfie ஆண்ட்ராய்டு 

BestMe Selfie ஐபோன் 

Love to hear what you think!

2 comments:

 
Top