கூகுள் மூலம் மின்னஞ்சல் (ஜிமெயில்), வரைபடம் (கூகுள் மேப்ஸ்), இணைய சேமிப்பகம் (கூகுள் டிரைவ்),  மொழிபெயர்ப்பு சேவை உட்பட இன்னும் ஏராளமான சேவைகளை பெற முடிந்தாலும் கூட கூகுள் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது கூகுள் தேடியந்திரம் தான்!

Google search


பரந்துபட்ட இணையத்தில் ஏதாவதொரு தகவலை தேடிப்பெருவதற்கு அன்று தொடக்கம் இன்றுவரை பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு தேடியந்திரமே கூகுள் தேடியந்திரமாகும்.

எனவே காலத்துக்குக் காலம் இதில் புதுப்பது வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவது வழமையே!

அந்தவகையில் தற்பொழுது மற்றுமொரு பயனுள்ள வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் தேடலில் புகைப்படங்களை சேமிக்கலாம்.


அதாவது நீங்கள் கூகுள் தேடியந்திரத்தை பயன்படுத்தி புகைப்படங்களை தேடும் போது அவற்றை இணையத்திலேயே சேமித்து வைத்து அவற்றை மீண்டும் தேவைப்படும் போது உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கான வசதியே அதுவாகும்.

எனவே கூகுள் மூலம் புகைப்படங்களை தேடும் போது உங்களை கவர்ந்த அழகிய புகைப்படங்களை இனி தவறவிட வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை இந்த புதிய வசதி மூலம் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.


இந்த வசதியை பெற்றுக்கொள்வது எப்படி?


உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் பயன்படுத்தும் ஏதாவதொரு இணைய உலாவியை திறந்து கொள்க.இனி இந்த இணைப்பை சுட்டுவதன் மூலம் உங்கள் கூகுள் கணக்கிற்குள் நுழைந்து கொள்க.

பின் உங்களுக்கு தேவையான புகைப்படங்களை கூகுள் மூலம் தேடிப்பெறும் போது குறிப்பிட்ட புகைப்படத்தின் வலது கீழ் பகுதியில் Save எனும் புதியதொரு குறியீட்டை காணலாம்.
இனி அதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தை உங்கள் கூகுள் கணக்கில் சேமித்துக்கொள்ள முடியும்.

பின்னர் https://www.google.com/save எனும் முகவரி மூலம் நீங்கள் சேமித்த புகைப்படங்களை உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு நீங்கள் சேமிக்கும் புகைப்படங்களை வெவ்வேறு தலைப்புக்களின் கீழ் வகைபடுத்திக் கொள்வதற்காக குறிச்சொல் இடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


தொடர்புடைய இடுகைகள்:

இதன் வீடியோ இணைப்பு பின்வருமாறு குறிப்பு:

குறிப்பிட்ட சில நாடுகளில் இந்த வசதி ஏற்கனவே இருந்துவந்தது. எனினும் தற்பொழுது இந்த வசதியை எந்த ஒரு நாட்டில் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில வேலை இந்த வசதி இதுவரை உங்களுக்கு கிடைக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு. இருந்தாலும் கவலை வேண்டாம் விரைவில் கிடைத்துவிடும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top