இயற்கை அனர்த்தங்களின் போதும் மற்றும் ஏனைய ஆபத்தான சூழ்நிலைகளிலும் தமது பேஸ்புக் நண்பர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக பேஸ்புக் சேவையில் சேஃப்டி செக் எனும் வசதி பயன்படுகிறது.

பேஸ்புக் சேஃப்டி செக் இலங்கை


பாரிஸ் நகரில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலின் போதும் சீரற்ற காலநிலையால் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போதும் என இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் இந்த வசதி பேஸ்புக் சேவையில் பயன்படுத்தப்பட்டமை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.


அந்த வகையில் தற்பொழுது இலங்கையில் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உங்களின் நண்பர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் சேவையில் இலங்கையர்களுக்கு "சேஃப்டி செக்" எனும் வசதி செயற்படுத்தப்பட்டுள்ளது.கீலுள்ள இணைப்பை சுட்டுவதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்தி உங்கள் பாதுகாப்பை ஏனைய நண்பர்களுக்கும் அறியப்படுத்தலாம்.


நீங்கள் பேஸ்புக் சேவையை பயன்படுத்த ஸ்மார்ட்போன்களுக்கான பேஸ்புக் செயலியை பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட மெனு பட்டனை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் சேஃப்டி செக் எனும் வசதியை பெற்றுக்கொள்ளலாம்.அல்லது பேஸ்புக் செயலியில் Safety Check என தேடுவதன் மூலம் இந்த வசதியை பெறலாம்.பெறப்படும் சேஃப்டி செக் பகுதியில் Mark Safe என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள் என்பதை உங்களது ஏனைய நண்பர்களால் அறிந்துகொள்ள முடியும். அல்லது சேஃப்டி செக் பகுதியில் கருத்துரைகளை இடுவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top