எது வித கட்டணங்களும் இன்றி முற்றிலும் இலவசமாகவே வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடிகின்றது.

வாட்ஸ்அப் கோல்ட் பாதுகாப்பு


அத்துடன் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் எந்த ஒரு தகவலையும் பகிர்ந்துகொள்ள உதவும் இந்த சேவை மாதாந்தம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.


எனவே பலராலும் நம்பப்பட்டு பயன்படுத்தப்பட்டுவரும் இந்த சேவையின் பெயரை ஒரு பொறியாக பயன்படுத்தி, பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும் சில வருந்தத்தக்க நிகழ்வுகள் இணையத் திருடர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் வாட்ஸ்அப் கோல்ட் எனும் பெயரில் வாட்ஸ்அப் பயனர்களை குறி வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு இணைய தாக்குதல் வெகுவாக பரவி வருவதை அறிய முடிகிறது.

அவ்வாறு பயனர்களுக்கு அனுப்பப்படும் போலியான செய்தியில் உள்ள தகவலானது பின்வருமாறு அமைந்திருக்கும்.


தற்பொழுது வாட்ஸ்அப் கோல்ட் பதிப்பு வெளியாகி உள்ளது. இது பிரபலங்களால் பயன்படுத்தப்படும் சேவையாகும். தற்பொழுது உங்களாலும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். வாட்ஸ்அப் கோல்ட் மூலம் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடிவதுடன் தாம் தவறுதலாக அனுப்பிய செய்திகளையும் அழிக்க முடியும்.

இது போன்ற கவர்சிகரமான செய்தியுடன் அதனை தரவிறக்குவதற்கான இணைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே இதனை நீங்கள் நிறுவும் பட்சத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உங்களை அறியாமலேயே திருடப்படலாம்.

எனவே இது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top