உறவினர் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்கு என இன்று பேஸ்புக்மெசெஞ்சர், வாட்ஸ்அப், வைபர் டெலிகிராம் போன்ற ஏராளமான இலவச சேவைகள் உருப்பெற்றுள்ளன.அவ்வாறான சேவைகள் ஊடாக எமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை பல்வேறு வழிகளில் ஏனையவர்களுக்கு வெளிப்படுத்த முடியும்.

அவ்வாறு நாம் ஏனையவர்களுக்கு வெளிப்படுத்தும் எமது கருத்துக்கள் எழுத்து வடிவிலும், புகைப்படங்களாகவும், வீடியோ கோப்புக்களாகவும் அல்லது இமொஜி, ஸ்டிக்கர்  போன்றவைகலாகவும் அமைந்திருக்கலாம்.

ஆனால் இவற்றுக்கும் மேலாக எண்கள், எழுத்துக்கள், குறியீடுகள் போன்றவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய உருக்களை ஏனையவர்களுடன் பகிந்துகொள்ள உதவுகிறது Tictures எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி.

கீலுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு தரவிரக்கி நிறுவிக்கொள்ளலாம்.


இந்த செயலியின் பிரதான பகுதியில் எண்கள், எழுத்துக்கள், குறியீடுகளை கொண்டு உருவாக்கப்பட்ட உருக்கள் அதன் உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையின் அடிப்படையில் கோபம் (Anger), மகிழ்ச்சி (Happy), வருத்தம் (Sad), வேடிக்கை (Funny), பயம் (Scared), அன்பு (Love) என வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தி தரப்பட்டுள்ளது.
அவற்றை Copy செய்து உங்களுக்குத் தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்ளவோ, அல்லது பேஸ்புக்மெசெஞ்சர், வாட்ஸ்அப், வைபர் டெலிகிராம் போன்ற மற்றும் ஏனைய சேவைகளின் ஊடாக ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும்.அத்துடன் அவற்றில் தரப்பட்டுள்ள உருக்களில் உங்களுத்த் தேவையான வாசங்களை எழுதி அவற்றை பகிர்ந்துகொள்ளவும் முடியும்.மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன். 
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top