எமக்காக பல தியாகங்களை செய்து வாழும் எமது அன்னையர்களை வாழ்த்துவதற்காக பேஸ்புக் தளத்தில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளது.

பேஸ்புக் ரியாக்சன் பட்டன்


மே 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் Thankful எனும் புதிய ரியாக்சன் பட்டன்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பேஸ்புக் தளத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான பட்டன்கள் (ரியாக்சன் பட்டன்) அறிமுகப்படுத்தப்படுத்தப் பட்டதன் பின் தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்படும் முதல் ரியாக்சன் பட்டன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் பேஸ்புக் மெசெஞ்சரிலும் இது போன்ற புதியதொரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பேஸ்புக் மெசெஞ்சரின் வலது கீழ் மூலையில் "பூ" அடையாளத்தை கொண்ட தற்காலிகமான ஒரு பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பட்டனை பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் வாழ்த்துச் செய்திகளை பூக்களை கொண்டு அலங்கரிக்க முடியும்.

இந்த வசதிகளை நீங்களும் பெற்றுக்கொள்ள கீலுள்ள சுட்டி மூலம் பேஸ்புக், மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் செயலிகளின் புதிய பதிப்பை நிறுவிக்கொள்க.


எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பயன்படுத்திக்கொள்ள முடியுமான இது இலங்கை, இந்தியா உட்பட 82 நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் வீடியோ இணைப்பை கீழே காணலாம்புதிய பதிப்பை தரவிறக்கிய பின்னரும் உங்களுக்கு இந்த வசதி கிடைக்கவில்லை எனின் Application Manager பகுதியின் ஊடாக பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை தெரிவு செய்து Clear Cache, Clear Data, Force Stop என்பதை சுட்டிய பின்னர் மீண்டும் பேஸ்புக் செயலியை திறந்து பயன்படுத்துக.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top