சாம்சங் கேலக்ஸி ஏ (A) சாம்சங் கேலக்ஸி ஜே (J) போன்ற வரிசைகளில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்திய சாம்சங் நிறுவனம் தற்பொழுது சாம்சங் கேலக்ஸி சீ (C) வரிசையிலும் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளது. (ஏனைய எழுத்துக்களையும் விட மாட்டார்கள் போலும் - மைன்ட் வாய்ஸ்)

சாம்சங் கேலக்ஸி C5, C7


சாம்சங் கேலக்ஸி சீ5 மற்றும் சாம்சங் கேலக்ஸி சீ7 ஆகிய ஸ்மார்ட்போன்களே அவைகலாகும்.முற்றிலும் உலோகத்திலான சுற்றுப்புறத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இவைகள் ஐபோனின் வெளிப்புற தோற்றத்தை ஒத்து காணப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி சீ5 மற்றும் சாம்சங் கேலக்ஸி சீ7 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை கொண்டியங்கும் அதேநேரம் ஒரே தெளிவுத்திறனில் அமைந்த கேமரா வசதிகளை கொண்டுள்ளன.

இவைகள் இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளாக அவைகள் கொண்டுள்ள ப்ராசசர் மற்றும் திரையின் அளவுகளை குறிப்பிடலாம்.

இவற்றின் விபரக்குறிப்புகள் பின்வருமாறு:

சாம்சங் சீ5

 • 5.2 அங்குல FHD திரை 
 • ஸ்னேப்டிராகன்  617 ப்ராசசர் 
 • 4 ஜிபி RAM
 • 32 ஜிபி உள்ளக நினைவகம் (மைக்ரோ எஸ்.டி  கார்ட் மூலம் 128 ஜிபி வரை அதிகரிக்கலாம்)
 • 16 மெகாபிக்சல் பிரதான கேமரா 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா 
 • ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதி


சாம்சங் சீ7

 • 5.7 அங்குல FHD திரை 
 • 2.0GHz வேகத்தில் இயங்கும் ஒக்டா கோர் ஸ்னேப்டிராகன் 625 ப்ராசசர் 
 • 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய இரு பதிப்புகள்.
 • 3300mAh வலுவுடைய பேட்டரி
 • ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதி


இவற்றின் விலைகள் முறையே 330 மற்றும் 396 அமெரிக்க டாலர்கள் ஆகும் 


தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top