இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் வெறும் அழைப்புக்களை மேற்கொள்வதற்கு மாத்திரமின்றி இன்னும் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.


QualityTime Android


எனவே எமது ஸ்மார்ட்போன் மூலம் அலுவலக தேவைகள், பொழுது போக்கு அம்சங்கள், தனிப்பட்ட விடயங்கள் என எமது வெவ்வேறான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வெவ்வேறான செயலிகளை பயன்படுத்துகின்றோம்.

அதேபோல் மேலும் பல தேவைகளுக்காக எமது ஸ்மார்ட்போனை பல தடவைகள் அன்லாக் (Unlock) செய்கிறோம்.

இது போன்று நாம் எமது ஸ்மார்ட்போன் மூலம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாட்டையும் பதிந்து அவைகள் தொடர்பான புள்ளிவிபரங்களை அறிந்து கொள்ள உதவுகிறது QualityTime எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி 

ஆழகிய மற்றும் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும் மிகவும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். 

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் எனின் கீலுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிரக்கிக் கொள்ளலாம்.


QualityTime செயலி மூலம் பின்வரும் தகவல்களை அறிந்துகொல்லாம்.


  • இன்று நீங்கள் பயன்படுத்தியுள்ள செயலிகளும் அவைகள் ஒவ்வொன்றையும் எவ்வளவு நேரம் பயன்படுத்தியுள்ளீர்கள் என்ற விபரங்களும்.


  • வாரத்தில் ஒவ்வொரு நாளிலும் எந்தெந்த செயலிகளை எவ்வளவு நேரம் பயன்படுத்தியுள்ளீர்கள் என்ற விபரங்கள்.
  • ஒவ்வொரு நாளிலும் நீங்கள் அதிக தடவைகள் திறந்து பயன்படுத்திய செயலிகளின் விபரங்கள்.


  • ஒவ்வொரு வாரத்திலும் நீங்கள் அதிக தடவைகள் திறந்து பயன்படுத்திய செயலிகளின் விபரங்கள்.
  • இன்று உங்கள் ஸ்மார்ட்போனின் திரையை நீங்கள் எத்தனை தடவைகள் அனலாக் செய்துள்ளீர்கள் என்பது தொடர்பான விபரங்கள்.

  • ஒவ்வொரு நாளிலும் அல்லது ஒவ்வொரு வாரத்திலும் உங்கள் ஸ்மார்ட்போனின் திரையை நீங்கள் எத்தனை தடவைகள் அனலாக் செய்துள்ளீர்கள் என்பது தொடர்பான விபரங்கள்.


  • உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்காக இன்று எவ்வளவு நேரம் செலவழித்து உள்ளீர்கள்.
  • வாரத்தில் ஒவ்வொரு நாளும் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்.
  • ஒவ்வொரு வாரமும் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்.


மேற்கூறப்பட்ட புள்ளிவிபரங்கள் மாத்திரமின்றி IFTTT சேவையுடன் ஒருங்கிணைத்து பயன்படுத்தும் வசதிகள் உட்பட இன்னும் ஏராளமான வசதிகளையும் பெற்றுக்கொள்ள உதவுகிறது இந்த செயலி 


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top