வாட்ஸ்அப், வைபர் மெசேஜிங் சேவைகளை போன்று அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் சேவைகளுள் டெலிகிராம் சேவையும் ஒன்றாகும்.


டெலிகிராம் வசதிகள்


மாதாந்தம் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இது அதன் பயனர்களுக்கு அருமையான பல வசதிகளை வழங்குகிறது.

அந்த வகையில் இதன் புதிய பதிப்பிலும் அருமையான பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

டெலிகிராம் மெசெஞ்சர் புதிய வசதிகள் 

  • அனுப்பிய செய்திகளை எடிட் செய்யும் வசதி 


அனுப்பிய செய்திகளை அழிப்பதற்கான வசதி வைபர் சேவையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோன்ற ஆனால் சற்று வேறுபட்ட வகையில் அனுப்பிய செய்திகளை திருத்துவதற்கான வசதி தற்போது டெலிகிராம் சேவையில் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது டெலிகிராம் மூலம் நாம் ஏனையவர்களுக்கு அனுப்பும் செய்திகளை மீண்டும் மாற்றியமைத்துக் கொள்வதற்கான வசதியே இதுவாகும்.

இதன் புதிய பதிப்பை கீலுள்ள சுட்டி மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.


டெலிகிராம் மூலம் நாம் ஏற்கனவே அனுப்பிய செய்தி ஒன்றில் மாற்றங்கள் ஏற்பாடுத்த வேண்டி இருப்பின் குறிப்பிட்ட செய்தி அனுப்பட்டு அடுத்த 48 மணிநேரங்களுக்குள் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
இதனை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட செய்தியை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் Edit என்பதை சுட்ட வேண்டும் இனி அதில் உங்களுக்குத் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.


  • குழு உறுப்பினர் ஒருவரை குறிப்பிட்டுக் காட்டும் வசதி மேலும் குழு ஒன்றில் உள்ள உறுப்பினர் ஒருவரை குறிப்பிட்டுக் (Mention) காட்டலாம். இதனை மேற்கொள்ள @ குறியீட்டுடன் அவரது பெயரை தட்டச்சு செய்ய வேண்டும். டெலிகிராம் குழு ஒன்றில் 5000 உறுப்பினர்கள் வரை இணைக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

  • நபர்களை அல்லது குழுவை ஹோம் ஸ்க்ரீன் பகுதியில் இணைக்கும் வசதி அத்துடன் டெலிகிராம் மூலம் நீங்கள் அடிக்கடி தொடர்புகொள்ளும் நபர்களை அல்லது குழு ஒன்றை வேகமாக திறந்து கொள்வதற்கு ஏற்றவகையில் அவற்றை ஹோம் ஸ்க்ரீன் (Home Screen) பகுதியில் இணைத்துக் கொள்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.


Love to hear what you think!

1 comments:

 
Top