ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என கூகுள் நிறுவனம் பல்வேறு கீபோர்டு செயலிகளை உருவாக்கி நிர்வகித்து  வருகிறது.அவ்வாறான கீபோர்ட் செயலிகளுள் "கூகுள் கீபோர்ட்" எனும் செயலியும் ஒன்றாகும். இது உலகளாவிய ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு பொதுவான கீபோர்ட் என்றும் குறிப்பிடலாம்.


காரணம் இதில் அனைத்து மொழிகளை பயன்படுத்துவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. தமிழ் மொழியும் கூட இந்தியா, சிங்கப்பூர் என இரு வேறு முறைகளில் தட்டச்சு செய்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.

தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் புதிய பதிப்பானது அருமையான பல புதிய வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

இதன் புதிய பதிப்பு இதுவரை ப்ளே ஸ்டோரில் மேம்படுத்தப்படவில்லை. என்றாலும் கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தி இதனை (APK) உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நிறுவிக்கொள்ளலாம்.


கூகுள் கீபோர்ட் புதிய பதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.

  • ஒரு கையை பயன்படுத்தி தட்டச்சு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

  • கீபோர்ட் செயலியின் எழுத்துக்களில் உள்ள சுற்றுப்புற விளிம்புகளை (Border) தோன்றச் செய்யவும் மறைப்பதற்குமான வசதி வழங்கப்பட்டுள்ளது.
  • எழுத்துக்களை தொடர்ச்சியாக அழுத்தும் போது குறியீடுகளை உள்ளிடுவதற்கான வசதி தரப்பட்டுள்ளது.
  • கீபோர்டு செயலியின் உயரத்தை கூட்டிக் குறைப்பதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

  • அத்துடன் தானாக பரிந்துரைக்கப்படும் சொற்களில் பொருத்தமற்ற சொற்களை தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலம் அவற்றை நீக்கிக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


இவைகள் தவிர இன்னும் பல மாற்றங்களும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள் கீபோர்ட் செயலி மூலம் தமிழ் மொழியை Tamil99 முறையிலேயே தட்டச்சு செய்ய முடியும் இருப்பினும் நீங்கள் தமிழ் மொழியை ஒலிப்பு முறையில் தட்டச்சு செய்ய விரும்பினால் கூகுள் தரும் "கூகுள் இன்டிக் கீபோர்டு" செயலியை பயன்படுத்தலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top