ஆலோ மற்றும் டுவோ எனும் இரு மெசெஞ்சர் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் அல்லோ மற்றும் டுவோபேஸ்புக் மெசெஞ்சர், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு பெரும் போட்டியாக இவைகள் அமையலாம்.


இவ்விரு செயலிகளும் வெவ்வேறுபட்ட வசதிகளை தரக்கூடியவைகள் ஆகும்.

ஆலோ எனும் செயலி மூலம் எண்ணங்கள் கருத்துக்களை எழுத்துக்களாகவும் புகைப்படங்களாகவும் பகிர்ந்துகொள்ள முடியும். அதேநேரம் டுவோ செயலியானது வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள உதவுகிறது.

இந்த செயலிகள் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை எனினும் கீலுள்ள சுட்டி மூலம் முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதன் மூலம் இந்த செயலிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இவற்றை உங்களால் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


மேலும் இதனை பயன்படுத்துவதற்கு கூகுள் கணக்கு அவசியமில்லை. வாட்ஸ்அப் மற்றும் ஏனைய சேவைகளை போன்று உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் கணக்கொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும்.

மேலும் இவற்றின் ஊடாக பகிரப்படும் தகவல்கள் End-to-end encryption எனும் முறையில் பாதுகாக்கப்படுகிறது. அதாவது நீங்கள் பகிரும் தகவல்களை அல்லது டுவோ மூலம் மேற்கொள்ளும் வீடியோ அழைப்புக்கள் போன்றவற்றை எந்த ஒருவராலும் கண்காணிக்க முடியாது.

கூகுள் ஆலோ சிறப்பம்சங்கள்


ஆலோ செயலியானது வெறும் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு மாத்திரமின்றி கூகுள் நவ் போன்று தானியக்க முறையில் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றது.

மேலும் இதன் மூலம் நீங்கள் எழுத்துக்களை பகிரும் போது அதன் அளவை கூட்டி குறைப்பதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீங்கள் புகைப்படங்களை பகிரும் போது அவற்றின் மேல் தேவையானவற்றை  கையால் எழுதவும் வரையவும் முடிகிறது.

கூகுள் டுவோ சிறப்பம்சங்கள்:

வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் டுவோ செயலியில் நொக் நொக் (Knock Knock) எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழைப்புக்களுக்கு பதிலளிக்க முன்னரே அழைப்பவரை வீடியோ மூலம் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் இது குறைந்த வேகைத்தை கொண்ட இணைய இணைப்பின் போதும் சிறப்பாக இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான இதன் செயலிகள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எனினும் நாம் மேற்கூறியது போன்று நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் எனின் இந்த செயலிகளை பயன்படுத்துவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸஅப், வைபர் போன்றவற்றுக்கு ஈடாகுமா? அல்லது அவற்றையும் மிகைக்குமா? என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்!
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

1 comments:

 
Top