பேஸ்புக் மெசெஞ்சர் பொட்ஸ் 

அண்மையில் பேஸ்புக் நிறுவனம் "பொட்ஸ்" எனும் புதியதொரு வசதியை அதன் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

பேஸ்புக் மெசெஞ்சர் பொட்ஸ்


இந்த சேவையின் மூலம் தானியங்கி முறையில் பேஸ்புக் மெசெஞ்சரில் இருந்து பதில்களை பெற்றுக்கொள்ள முடியும்.அதாவது போக்குவரத்து தொடர்பான தகவல்கள், காலநிலை தொடர்பான தகவல்கள் உட்பட இன்னும் பயனுள்ள பல தகவல்களை இதன் மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் காலநிலை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்பினால் உங்களுக்கு உதவுகிறது Poncho எனும் பேஸ்புக் மெசெஞ்சரின் பொட்ஸ் வசதி.

இந்த வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ள பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்ளல் வேண்டும். (தரவிறக்க  இணைப்புகள் பதிவில் வழங்கப்பட்டுள்ளன)


 Poncho எனும் பொட்ஸ் வசதியை உங்கள் பேஸ்புக் மெசெஞ்சரில் இணைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் இருக்கும் பிரதேசத்தின் காலநிலை உட்பட உலகின் எந்த ஒரு பகுதியினது காலநிலை தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.


Poncho பொட்ஸ் வசதியை உங்கள் பேஸ்புக் மெசெஞ்சரில் இணைத்துக் கொள்வது எப்படி?


உங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் இடது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள "+" சுட்டுக பின்னர் Seach என்பதை அழுத்தி  Poncho தட்டச்சு செய்க.
பின்னர் கிடைக்கும் முடிவுகளில் Bots and Businesses என்பதற்குக் கீழ் இருக்கும் Poncho என்பதை தெரிவு செய்வதன் மூலம் அதனை உங்கள் உங்கள் மெசெஞ்சரில் இணைத்துக் கொள்ளலாம்.Poncho பொட்ஸ் மூலம் காலநிலை தகவல்களை அறிவது எப்படி?

  • நீங்கள் முதன் முதலில் இந்த சேவையை பயன்படுத்தும் போது உங்கள் பிரதேசம் தொடர்புபட்ட காலநிலை தொடர்பான கேள்விகளை நீங்கள் வினாவினால் உங்கள் பிரதேசம் எது என்பதை கேட்கும், உங்கள் பிரதேசத்தை உள்ளிட்டதன் பின்னர் உங்களுக்கான பதில்கள் உடனுக்குடன் கிடைக்கும்.


உங்கள் பிரதேச காலநிலை 

பேஸ்புக் மெசெஞ்சரில் Weather என வினாவுவதன் மூலம் உங்கள் பிரதேசத்தின் தற்போதைய காலநிலை தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

உலகிலுள்ள ஏதாவது ஒரு பிரதேசத்தின் காலநிலை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள:

உதாரணத்திற்கு தற்பொழுது சென்னையில் மழை பெய்கிறதா? என்பதை அறிந்துகொள்ள Is it raining in chennai? என வினவலாம்.
மேற்குறிப்பிட்ட முறையில் ஒரு பிரதேசத்தின் காற்று, மழை, வெப்பம், குளிர், தொடர்பான அனைத்து தகவல்களையும் அறியாலாம்.

இன்று வெளியே செல்லும் போது குடை அவசியமா?

நீங்கள் வெளியே செல்லும் போது மழை பெய்யுமா? குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? என்ற சந்தேகமா? அப்படியாயின் அதனையும் Poncho இடம் கேட்காலம். 

இதற்கு Do I need an umbrella today? என வினாவலாம் இதன் போது உங்கள் பிரதேசத்தில் மழை பெய்வதற்கான காலநிலை இருப்பின் குடை எடுத்துச் செல்ல வேண்டும் என உங்களுக்கு அறிவுறுத்தும்.

எதிர்வரும் நாட்களுக்கான  காலநிலை 

இன்னும் 5 நாட்களுக்கான காலநிலை விவரங்களை இதன் மூலம் அறிய வேண்டுமா? அப்படியாயின் What’s the 5 day forecast? என தட்டச்சு செய்து அறியலாம்.

இன்று உங்கள் பிரதேசத்தில் ஒவ்வொரு மணித்தியாலமும் கலாநிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிய வேண்டுமா? அப்படியாயின் Hourly forecast? என தட்டச்சு  செய்யலாம்.

இது போன்று காலநிலை தொடர்பான மேலும் பல கேள்விகளுக்கு இதன் மூலம் விடை அறியலாம், நீங்களும் முயற்சித்துதான் பாருங்களேன்!தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top