வாட்ஸ்அப் போன்ற சேவைகளின் வருகைக்குப் பின்னர் வழக்கொழிந்து போனது எஸ்.எம்.எஸ் முறை மட்டுமல்ல. அதனோடு இணைந்த எம்.எம்.எஸ் முறையும் தான்!


WhatsApp Magic cleaner


ஆரம்பத்தில் புகைப்படங்களை நாம் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள  எம்.எம்.எஸ் முறையை பயன்படுத்தி வந்தோம். என்றாலும் இன்று பலருக்கு அப்படியென்றால் என்னவென்றே புரிவதில்லை.எது எப்படியோ வாட்ஸ்அப் சேவை இன்று அனைவராலும் பயன்படுத்தப்படுவதால் எமக்கு ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப் மூலம் வரக்கூடிய புகைப்படங்களோ கொஞ்ச நஞ்சமல்ல.

இவ்வாறு வரக்கூடிய புகைப்படங்கள் எதோ ஒருவகையில் தானாகவே எமது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டு விடுகிறது. சில சந்தர்பங்களில் இவைகள் 500, 1000 என அதிகரித்துவிடும் சந்தர்பங்களும் உண்டு. அவற்றுள் தேவையற்ற புகைப்படங்களோ ஏராளம். 

இவ்வாறு சேமிக்கப்படும் தேவையற்ற புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவுத்திறன் மூலம் கண்டறிந்து நீக்கிக்கொள்ள உதவுகிறது மேஜிக் கிளீனர் (Magic cleaner) எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீலுள்ள சுட்டி மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நிறுவிக் கொள்ளலாம்.


இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு. இந்த செயலியை நிறுவியதன் பின்னர் குறிப்பிட்ட செயலியை திறந்து உங்கள் ஸ்மார்ட்போனை சோதிப்பதன் ஊடாக வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டு உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து தேவையற்ற புகைப்படங்களையும் இனங்கண்டு கொள்ளலாம்.
தொடர்புடைய இடுகை:


மேஜிக் கிளீனர் செயலியின் தேடல் முடிவில் காண்பிக்கப்படும் தேவையற்ற அனைத்து புகைப்படங்களும் அதன் தன்மையின் அடிப்படையில் "Quotes, Notes, Memes, Screenshots என வகைப்படுத்தப்பட்டு தரப்படுகின்றமை இதன் விஷேட அம்சமாகும்.

இருப்பினும் இதன் மூலம் ஆகக்கூடியது 1000 புகைப்படங்களை மாத்திரமே கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும். அழைப்பு விடுப்பதன் (Invite) மூலம் இந்த செயலியை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தினால் இதன் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.புதுப்பிக்கப்பட்டது: (4-5-2016)

இதன் புதிய பதிப்பில் 1000 புகைப்படங்கள் எனும் வரையறை நீக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் எத்தனை புகைப்படம்  வேண்டுமென்றாலும் நீக்கிக்கொள்ளலாம்.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top