அண்மையில் ஏராளமானவர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு இனங்கண்டு கொள்ள முடியாத இலக்கங்களில் இருந்து போலியான சில குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.இது வரை அறிந்துகொண்ட வகையில் இலங்கையில் டயலொக் பாவனையாளர்களின் இலக்கங்களுக்கு இவ்வாறன போலியான செய்திகள் அதிகம் வந்துள்ளன.


அவைகள் பெரும்பாலும் +375...., +371...., +381...., +352...., +461.... போன்ற இலக்கங்களை முதல் எண்களாக கொண்ட தொலைபேசி இலக்கங்கலாகும்.

அவ்வாறு அனுப்பப்படும் செய்திகளானது "நீங்கள் சீட்டிழுப்பில் பி.எம்.டபிள்யூ கார் அல்லது அது போன்ற ஏதாவது பரிசு பொருட்களை வெற்றி பெற்றிருப்பதாகவும். எனவே அதில் வழங்கப்பட்டுள்ள இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளும் படியும் அமைந்துள்ளது.மேலும் சில செய்திகள் "இதுவே கடைசி வாய்ப்பு எனவே இந்த இலக்கத்திற்கு அவசரமாக தொடர்பு கொள்ளும் படி அமைந்துள்ளன.

எனவே இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள், அதேநேரம் ஆர்வக்கோளாறு காரணமாக அதில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு நீங்கள் தொடர்பு கொண்டால் உங்கள் அழைப்புக்கான கட்டணத்தை நீங்களே பொறுப்பேற்க வேண்டி வரும்.

சிலருக்கு இவ்வாறான செய்திகள் பல தடவைகள் தோன்றி எரிச்சலூட்டவும் செய்கின்றன. எனவே இதனை தவிர்த்துக்கொள்ள கீலுள்ள இனைப்பை பயன்படுத்தி ட்ரூ மெசெஞ்சர் செயலியை நிறுவிக்கொள்ளலாம்.


ட்ரூ மெசெஞ்சர் செயலி மூலம் இனந்தெரியாத இலக்கங்களில் இருந்துவரும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண முடிவதுடன் எரிதங்களை (ஸ்பேம்) தவிர்த்துக் கொள்ளவும் முடியும்.

இவ்வாறன போலியான செய்திகளை பெற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன், இதுவே இந்த பதிவை எழுதத் தூண்டியது. அவதானத்துடன் இருக்க நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top