ஐபோன் சாதனங்களில் பெற முடியாத ஆனால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியுமான வசதிகளுள் அவற்றுக்கான லாஞ்சர் செயலிகளின் பயன்பாடும் ஒன்றாகும்.

ஆண்ட்ராய்டு லாஞ்சர் செயலிகள்


எமது விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்ற வகையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் தோற்றத்தை மாற்றி பயன்படுத்த முடியும்.

இதற்கென ஏராளமான லாஞ்சர் செயலிகள் இருந்தாலும்கூட அவற்றில் அனைத்தும் சிறந்த வசதிகளை தரக்கூடியவைகள் என கூற முடியாது.


இருப்பினும் நாம் கீழே வழங்கியுள்ள லாஞ்சர் செயலிகள் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் அதேநேரம் சிறந்த வசதிகளை தரக்கூடியவைகளும் ஆகும்.

5. கோ லாஞ்சர் 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களால் அதிகம் விரும்பி பயன்படுத்தி வரப்படும் லாஞ்சர்  செயலிகளுள் கோ லாஞ்சர் செயலியும் ஒன்றாகும்.
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு அழகியதொரு தோற்றத்தை தரும் இது நிறுவப்பட்டுள்ள செயலிகளை மறைப்பதற்கும் அவற்றை கடவுச்சொல் இட்டு பாதுகாப்பதற்குமான வசதிகளையும் தருவதுடன் மேலும் பல வசதிகளை தருகிறது.

நாம் கீழே வழங்கியுள்ள சுட்டி மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம். கோ லாஞ்சர் பற்றி முழுமையாக அறிய கீழுள்ள எமது பதிவை பார்க்க:
4. நோவா லாஞ்சர்

பலராலும் விரும்பி பயன்படுத்தப்படும் லாஞ்சர் செயலிகளுள் நோவா லாஞ்சர் செயலியும் ஒன்றாகும். உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளின் பெயர்களில் உள்ள எழுத்துக்களின் தோற்றங்களை கூட இதன் மூலம் மாற்றியமைக்க முடியும்.இரவு நேரத்தில்  தங்குதடையின்றி பயன்படுத்துவதற்கு நைட் மூட் எனும் புதியதொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது.

3. ஏரோவ் லாஞ்சர்

ஆண்ட்ராய்டு ஸ்மார்டபோன்களுக்கென மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தும் செயலிகளுள் இதுவும் ஒன்றாகும். நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் இலக்கங்கள், அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள், ஞாபகப்படுத்த வேண்டிய விடயங்க போன்றவற்றை ஹோம் ஸ்க்ரீன் பகுதியிலே இணைத்துக்கொள்ள முடியும்.

இந்த செயலி பற்றி முழுமையாக அறிய கீழுள்ள எமது பதிவை பார்க்க:
2. நெக்ஸ்ட் லாஞ்சர் 3டி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான ஒரு தோற்றம் தான் முக்கியமா? அப்படியாயின் நெக்ஸ்ட் லாஞ்சர் 3டி எனும் லாஞ்சர் செயலியை பயன்படுத்தலாம், இது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு முப்பரிமாண தோற்றத்தை தரக்கூடியதாகும். அதேநேரம் செயலிகளின் ஐகான்கள் உட்பட அவற்றின் அனிமேஷன் விளைவுகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.


1. கூகுள் நவ் லாஞ்சர்

உங்கள் ஸ்மார்ட்போனுக்கு எளிமையான தோற்றத்தை தரக்கூடிய இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் நிறுவனத்தின் லாஞ்சர் செயலியாகும்.

இதில் A-Z முறையில் செயலிகள் பட்டியல்படுத்தி தரப்பட்டுள்ளதுடன் அவற்றை மிக இலகுவாக தேடிப்பெற்றுக் கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

மேலும் கூகுள் நவ்  வசதியை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடியதாக அமையும். 

மேலும் யாஹூ நிறுவனத்தின் எவியேட் லாஞ்சர் செயலியும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் மேலே குறிப்பிட்ட செயலிகளுள் ஏதாவது ஒன்று உங்கள் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ற வகையில் உங்களை கவர்ந்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.  

தரவிறக்க இணைப்புகள்:

கோ லாஞ்சர் (அளவு சாதனத்துக்கு சாதனம் வேறுபாடும்)
நோவா லாஞ்சர் (அளவு சாதனத்துக்கு சாதனம் வேறுபாடும்)
ஏரோவ் லாஞ்சர் (அளவு சாதனத்துக்கு சாதனம் வேறுபாடும்)
நெக்ஸ்ட் லாஞ்சர் 3டி (அளவு சாதனத்துக்கு சாதனம் வேறுபாடும்)


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top