உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை பயன்படுத்தி அழகிய அனிமேஷன் விளைவுகளை கொண்ட வீடியோ காட்சியொன்றை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறீர்களா?

Quik video editor for android and iOS


அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது "குயிக்" எனும் ஸ்மார்ட்போன்களுக்கான செயலி.உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்கள், மற்றும் வீடியோ கோப்புக்களை தெரிவுசெய்வதன் மூலம் அவற்றை ஒரு சில நொடிப்பொழுதில் அழகிய அனிமேஷன் விளைவுகளை ஏற்படுத்தும் வீடியோ கோப்புக்களாக உருவாக்கிக் கொள்ளல் முடியும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரு சாதனங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியுமான இதனை கீலே உள்ள சுட்டியை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளலாம்.


ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் எந்த ஒருவராலும் மிக இலகுவாக இந்த செயலியை பயன்படுத்திக்கொள்ள முடியும். 


இந்த செயலியின் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள "+" குறியீட்டை சுட்டுவதன் மூலம் நீங்கள் உருவாக்கும் வீடியோவுக்கான புகைப்படங்கள் அல்லது ஏற்கனவே பிடிக்கப்பட்ட வீடியோ கோப்புக்களை தெரிவு செய்யலாம்.
பின்னர் அவற்றுக்கான அனிமேஷன் விளைவுகள் மற்றும் பின்புல இசைகள் போன்றன தானாகவே இணைக்கப்படும். நீங்கள் உருவாக்கும் வீடியோ கோப்புக்கென ஏராளமான பல அழகிய அனிமேஷன் விளைவுகள் இந்த செயலியில் தரப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு பிடித்த ஒன்றை நீங்கள் உருவாக்கும் வீடியோ கோப்புக்கு வழங்க முடியும்.

தேவையெனின் பின்புல இசையையும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் மாற்றியமைக்க முடியும். மேலதிகமாக உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பாடலையோ இசையையோ அவற்றுக்கு பின்புல ஒலியாக வழங்கிக்கொள்ளலாம்.
இவைகள் தவிர குயிக் எனும் இந்த செயலி மூலமே புகைப்படங்களில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள முடிவதுடன் அவற்றின் தோற்றங்களை வெவ்வேறு வர்ணங்களுக்கு மாற்றியமைக்கவும் முடியும்.

இதன் வீடியோ  இணைப்பு பின்வருமாறு 


இவற்றுடன் மேலும் பல வசதிகளை தரும் இந்த அருமையான செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.
தொடர்புடைய இடுகைகள்:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top