இன்றைய ஸ்மார்ட்போன்களின் ராஜாவாக என்ன தான் ஆண்ட்ராய்டு இருந்தாலும், அன்று தொடக்கம் இன்று வரை ஒரு தனித்துவமான ஸ்மார்ட் போனாக ஐபோன் இருக்கிறதென்றால் அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

ஐபோன் இரகசியம்


ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை ஐபோன், ஐபேட் சாதனங்களின் உத்தியோகபூர்வ புகைப்படத்தில் 9:41 AM வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளீர்களா?


12:00, 11:11, 10:10 என்பது போன்ற பார்க்கும்போது அழகிய தோற்றத்தை தரக்கூடிய ஒரு நேரத்தை வைக்காமல் எப்பொழுதும் 9:41 AM நேரத்தை ஆப்பிள் நிறுவனம் ஏன் வைக்கிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?

அது ஏனோ தானோ என்று வைக்கப்பட்ட நேரம் அல்ல மாறாக ஸ்டீவ் ஜாப்ஸ் ஆல் முதன் முதலாக உலகுக்கு ஐபோன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட நேரமே அதுவாகும்.

நீங்கள் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்துக்குச் சென்று அதிலுள்ள ஐபோன் புகைப்படங்களில் உள்ள நேரத்தை அவதானிக்க முடியும்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top