எமது புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் உட்பட இன்னும் ஏராளமான கோப்புக்களை பல்வேறு வழிமுறைகளில் நாம் ஏனையவர்களுடன் பகிர்ந்து வருகிறோம்.


ஆண்ட்ராய்டு கோப்பு பகிர்வு


இருந்தாலும் கோப்புக்களை இணையத்துக்கு தரவேற்றாமலே அதனை ஏனையவர்களுடன் பகிந்துகொள்ள உதவுகிறது Share via HTTP எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி.


இதனை கீழுள்ள இணைப்பு மூலம் இலவசமாகவே தரவிறக்கி உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிக்கொள்ள முடியும்.


பின்னர் குறிப்பிட்ட செயலியை திறந்து Pik a file எனும் பட்டனை சுட்டுவதன் மூலம் நீங்கள் ஏனையவர்களுடன் பகிர வேண்டிய கோப்புக்களை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து தெரிவு செய்ய வேண்டும்.

இனி அந்த கோப்பை ஏனையவர்களால் தரவிறக்கிக் கொள்வதற்கான இணைய முகவரி உருவாக்கப்படும்.
பிறகென்ன அவ்வாறு உருவாக்கப்பட்ட முகவரியை தேவையானவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களால் அதனை தரவிறக்கிக்கொள்ள முடியும்.

இவ்வாறு எவ்வளவு பெரியதொரு கோப்பையும் ஏனையவர்களுடன் பகிர முடியும் என்பது இனிப்பான விடயம் தானே!

எனினும் இதனை தரவிறக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனில் இணையம் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

1 comments:

 
Top