டிராப்பாக்ஸ் இணைய சேமிப்பகத்தில் புகைப்படங்கள், ஆவணங்கள், பாடல்கள், வீடியோ கோப்புக்கள், செயலிகள் போன்ற எந்த ஒன்றையும் சேமித்துக்கொள்ள முடியும்.

பேஸ்புக் மெசெஞ்சர் புதிய வசதி


அவ்வாறு சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை பேஸ்புக் மெசெஞ்சர் ஊடாக பகிர்ந்துகொள்வதற்கான வசதி பேஸ்புக் மெசெஞ்சர் சேவையில் வழங்கப்படுள்ளது.


இதன் மூலம் கோப்புக்களை பகிர்ந்துகொள்வது மிகவும் இலகு எனினும் இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள டிராப்பாக்ஸ் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற செயலிகளை அதன் அண்மைய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேம்படுத்திக் கொள்வதற்கான இணைப்புக்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை தரவிறக்கி நிறுவிய பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் டிராப்பாக்ஸ் கோப்புக்களை பின்வருமாறு பகிர்ந்துகொள்ளலாம்.


நீங்கள் பேஸ்புக் மெசெஞ்சரை பயன்படுத்தி டிராப்பாக்ஸ் சேமிப்பகத்தில் உள்ள கோப்புக்களை நண்பருக்கு அனுப்பவும் நண்பரால் அனுப்பப்பட்டதை திறந்து கொள்வதற்கும் டிராப்பாக்ஸ் தளத்தில் கணக்கு ஒன்றை ஆரம்பித்திருக்க வேண்டும்.

 டிராப்பாக்ஸ் பற்றி அறிய விரும்பினால் கீழுள்ள எமது  முன்னைய பதிவை பார்க்க:

1. முதலில் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை திறந்துகொள்க.

2. பின்னர் நீங்கள் கோப்புக்களை அனுப்ப வேண்டிய நபரை தெரிவுசெய்க.3. இனி அந்த சாளரத்தின் வலது கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கொண்ட குறியீட்டை சுட்டுக.4. பின் தோன்றும் பகுதியில் Dropbox என்பதை சுட்டுக.5. இனி டிராப்பாக்ஸ் சேமிப்பகத்தில் உள்ள அனைத்து கோப்புக்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் நண்பருடன் பகிர வேண்டியதை தெரிவு செய்து  Send என்பதை அலுத்துக  அவ்வளவுதான்!இனி குறிப்பிட்ட கோப்பு நண்பருக்கு அனுப்பப்படும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top