லாஞ்சர் செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் தோற்றத்தை வெவ்வேறு அழகிய தோற்றங்களுக்கு மாற்றிக்கொள்ள முடிவதுடன் மேலதிக பல வசதிகளையும் பெற முடிகிறது.அந்தவகையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் லாஞ்சர் செயலிகளுள் நோவா லாஞ்சர் செயலியும் ஒன்றாகும்.


இது உங்கள் ஸ்மாட்போனுக்கு அழகிய தோற்றத்தை தருவது மட்டுமின்றி அதன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்துக் கொள்ளவும் உதவுகிறது.இவற்றுடன் Night Mode எனும் வசதியும் இதன் புதிய பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.இந்த வசதியானது இரவு நேரங்களில் எமது கண்களுக்கு சிரமம் இன்றி ஸ்மார்ட்போனை பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கிறது.

நீங்கள் இதன் புதிய பதிப்பை நிறுவிய பின்னர் Nova Settings > Night Mode எனும் பகுதியின் ஊடாக இதன் Night Mode எனும் புதிய வசதியை செயற்படுத்திக் கொள்ளலாம்.இதனை செயற்படுத்திய பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனின் பின்புலம் தானாகவே இருண்ட நிறத்துக்கு மாறுவதுடன் கோப்புறைகளின் பின்புலங்களும் கூகுள் Search Bar இன் நிறமும் இருண்ட நிறங்களுக்கு மாற்றமடையும்.

மேலும் இந்த வசதியை இரவு நேரங்களில் தானாகவே செயற்படும் விதத்தில் அமைத்துக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. 

இதன் புதிய பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் மேம்படுத்தப்படவில்லை இருப்பினும் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை  APK Mirror தளத்தில் இருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top