அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய உலகில் இணையம் என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறியுள்ளது.

ஹேக்கிங்


நாம் நினைத்த மாத்திரத்தில் பல ஆயிரம் மைகளுக்கு அப்பால் உள்ள ஒருவருக்கு இணையம் வழியாக மிக சொற்ப நேரத்தில் தகவல்களை அனுப்பிவிடுகிறோம்.


இணையத்தை பயன்படுத்தி வீடுவரை பொருட்களை கொள்வனவு செய்வது தொடக்கம் நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்வது வரை அனைத்தும் இணையத்தின் உதவியுடனேயே இடம் பெறுகிறது.

இவ்வாறு இணையத்தின் மூலம் மனிதன் ஏராளமான பயன்களை பெற்றுக்கொண்டாலும் கூட இணையத்தின் ஊடாக தனி மனிதர்களின் தகவல்களை சுரண்டுவதற்கு நேரம்பார்த்து நிற்கும் ஒரு பிரிவினரும் இல்லாமல் இல்லை


இதன் விளைவால் அன்றாடம் பல ஆயிரக்கணக்கான இணையதளங்கள் முடக்கப்படுவடுடன் ஒவ்வொரு தனி நபர்களதும் கடனட்டை விபரங்கள், வங்கி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள்  மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தும் சூறையாடப்படுகிறது.

இதுபோன்று இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் நேரடியாக அறிந்துகொள்ள உதவுகிறது norsecorp எனும் இணையதளம்.
இதில் எந்தெந்த நாட்டிலிருந்து அதிக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகிறது எந்தெந்த நாடு தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதை பின்வரும் இணையதளம் மூலம் நீங்களே அறிந்துகொள்ளலாம்.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top