இன்றைய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள QWERTY கீபோர்ட் எனும் வடிவமைப்பை கொண்ட கீபோர்ட் மூலம் மிக இலகுவாகவும் வேகமாகவும் எந்த ஒன்றையும் தட்டச்சு செய்துகொள்ள முடிகிறது.

வேகமாக தட்டச்சு  செய்ய பயிற்ச்சி


இவ்வாறான கீபோர்ட் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும்போது தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகரித்துக்கொள்வதற்கான பயிற்சியை தருகிறது ZType எனும் ஸ்மார்ட்போன்களுக்கான செயலி இந்த செயலியானது உங்கள் தட்டச்சு வேகத்தை தூண்டக்கூடிய ஒரு விளையாட்டாகும்.

கீழுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவி திறந்த கொண்ட பின் மேலிருந்து கீழ் நோக்கி ஆங்கில சொற்கள் வருவதை அவதானிக்கலாம்.


அந்த சொற்களை குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ள  QWERTY கீபோர்ட் மூலம் தட்டச்சு செய்து அவற்றை அழிக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு கட்டத்தை முடித்து அடுத்த கட்டத்தை ஆரம்பிக்கும் போது அதில் சொற்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.இதனை விளையாடும் போது உங்கள் தட்டச்சு வேகத்தை தூண்டக்கூடிய வகையிலான பின்புல ஒலியும் (Background Music) இதில் வழங்கப்பட்டுள்ளது.

இதனை விளையாடும் போது மேலதிகமாக உங்களுக்கு ஆங்கில சொற்களை எழுத்துப்பிழை இன்றி திருத்தமாக எழுதுவதற்கான பயிற்சியும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.இந்த விளையாட்டை அன்றாடம் நீங்கள் ஒரு தடவை விளையாடி அதிக புள்ளிகளை பெற முயற்சித்தாலே போதும் நாளடைவில் உங்கள் தட்டச்சு வேகம் மின்னல் வேகம் தான்.

நீங்கள் பெரும் புள்ளிகளை வைத்து நாளடைவில் நீங்கள் தட்டச்சு வேகத்தில் பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தையும் அறிந்துகொள்ளலாம். 


நீங்களும் இந்த செயலியை தரவிறக்கி பயன்படுத்தியிருந்தால், நீங்கள் பெற்ற அதிகூடிய புள்ளிகளை பின்வரும் இணைப்பில் உள்ள எமது பேஸ்புக் பதிவில் கருத்துரையாக இடுவதற்கு மறவாதீர்கள்.தரவிறக்குக: 
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top