எஸ்.எம்.எஸ் (SMS) எம்.எம்.எஸ் (MMS) போன்ற பாரம்பரிய தொடர்பாடல் முறைகள் இன்று மழுங்கி வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற சேவைகளின் வளர்ச்சி ஓங்கி நிற்கிறது.

பேஸ்புக் மெசெஞ்சர் மறைக்கப்பட்ட செய்திகள்


அந்த வகையில் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் சேவைகளுள் பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையும் ஒன்றாகும். பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


இது மாதாந்தம் 900 மில்லியன் (7-4-2016) பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் மாதமொன்றுக்கு ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட செய்திகள் இதனூடாக பகிரப்படுகிறது.

இவ்வாறு பகிரப்படும் செய்தியானது நண்பர்களுக்கு மத்தியில் பகிரப்படும் ஒரு செய்தி எனின் அது நேரடியாக அனுப்பட்டவரை சென்றடைந்துவிடுகிறது.


என்றாலும் நண்பர் அல்லாத இன்னும் ஒருவரால் அல்லது பேஸ்புக் பக்கங்கள் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் செய்திகளுள் பெரும்பாலானவை ஸ்பேம்களாக (Spam) கருதப்பட்டு மறைக்கப்படுகின்றன.

அவற்றுள் பெரும்பாலானவை உண்மையிலேயே ஸ்பேம்களாக (Spam) இருந்தாலும்கூட சில சந்தர்பங்களில் நமக்கு தெரிந்த நபர்களால் அனுப்பட்ட செய்திகளாகவும் இருக்கலாம்.

பேஸ்புக் மெசெஞ்சரில் மறைக்கப்பட்ட செய்திகளை படிப்பது எப்படி?


நீங்கள் பேஸ்புக் தளத்தை கணினி மூலம் பயன்படுத்துபவர் எனின் கீழுள்ள இணைப்பை சுட்டுவதன் மூலம் ஸ்பேம் என கருதப்பட்டு மறைக்கப்பட்ட செய்திகளை காணலாம்.
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் பேஸ்புக் சேவையை பயன்படுத்துபவர் எனின் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள சுய விபரங்களுக்கான குறியீட்டை சுட்டும்போது பெறப்படும் சாளரத்தில் உள்ள People > Message Request என்பதை சுட்ட வேண்டும்.இனி உங்களுக்கு ஏனையவர்களால் அனுப்பப்பட்ட ஆனால் ஸ்பேம் (Spam) என மறைக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் காண்பிக்கப்படும்.
அதில் See Filtered Message என்பதை சுட்டினால் அது போன்ற இன்னும் பல செய்திகளையும் பார்க்கலாம்.

சுய விவர பகுதியில் People எனும் அமைப்பு காணப்படவில்லை எனின் உங்கள் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்க.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top