புகைப்படம் மற்றும் வீடியோ கோப்புக்கள் இல்லாத ஒரு ஸ்மாட்போன் இல்லை என்றே கூற வேண்டும்.

ஆண்ட்ராய்டு போட்டோ, வீடியோ மறைக்க


எமது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி எமது உறவினர்கள் நண்பர்களுடன் பிடிக்கும் புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் மற்றும் இன்றி இன்னும் பல்வேறு வழிகளில் எமது ஸ்மார்ட்போனில் இவைகள் வந்து சேர்ந்துவிடுகின்றன அவற்றுள் எமது குடும்ப உறுப்பினர்களுடைய, கொடுக்கல் வாங்கல்கள் சம்பத்தப்பட்ட, அல்லது வேறு தனிப்பட்ட அம்சங்களுடன் தொடர்புடைய புகைப்படங்களும் சேமிக்கப்பட்டிருக்கலாம்.

அவற்றை ஏனையவர்களின் கண்களுக்கு புலப்பத வகையில் கொள்வதன் மூலம் எமக்கு ஏற்படும் தேவையற்ற சங்கடங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.

இதற்கென ஏராளமான செயலிகளும் வழிமுறைகளும் இருந்தாலும் கீப் சேப் (KeepSafe) எனும் செயலியானது சிறந்த வசதிகளை தரக்கூடியதும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதும், கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.6 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற ஒரு செயலியும் ஆகும். கீழே வழங்கப்பட்டுள்ள இணைய சுட்டி மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ள முடியும்.


இந்த செயலியை நீங்கள் முதன் முதலில் திறக்கும் போது இந்த செயலிக்கான ஒரு கடவுச்சொல்லை உள்ளிட முடியும். 
பின்னர் குறிப்பிட்ட செயலியின் மூலம் நீங்கள் மறைக்க வேண்டிய புகைப்படங்கள் வீடியோ கோப்புக்களை உள்ளிட்டு அவற்றை ஏனையவர்களுக்கு தெரியாதவாறு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து மறைத்துக்கொள்ளலாம்.

இந்த செயலியில் இலவச பதிப்பு ப்ரீமியம் பதிப்பு என இருவேறு பதிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ப்ரீமியம் பதிப்பில் இலவச பதிப்பை விட சற்று மேலதிக வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் ஒரு சாதாரண பயனருக்கு இதன் இலவச பதிப்பு போதுமானது. இருந்த போதிலும் இதன் ப்ரீமியம் வசதிகளை இலவசமாக 30 நாட்களுக்கு பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

2 comments:

 
Top