எச்.டி.சி நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய எச்.டி.சி 10 எனும் அதன் சிறப்பு ஸ்மார்ட்போனில் பூஸ்ட் பிளஸ் (Boost+) எனும் செயலியையும் அறிமுகப்படுத்தியது.

எச்.டி.சி செயலி


இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் "க்ளீன் மாஸ்டர்" செயலியை போன்றதாகும். 


இதனை எச்.டி.சி ஸ்மார்ட்போன்களில் மாத்திரமின்றி ஆண்ட்ராய்டு லாலிபாப் அல்லது அதற்குப் பின் வெளிவந்த எந்த ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Boost+ எனும் இந்த செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளால் சேமிக்கப்படும் தேவையற்ற கோப்புக்களையும், தற்காலிக கோப்புக்களையும் கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும். 


மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் பின்புலத்தில் இயங்கும் தேவையற்ற செயலிகளின் செயற்பாட்டை தடைசெய்து உங்கள் ஸ்மார்ட்போனின் வேகத்தை பேணுவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

HTC Boost+


அத்துடன் இந்த செயலியில் உள்ள App Manager மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள தேவையற்ற செயலிகளை ஒரே நேரத்தில் தெரிவு செய்து நீக்கிக்கொள்ளவும் முடியும்.

இவைகள் தவிர உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு செயலிகளுக்கு Pattern Lock இடுவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஆண்ட்ராய்டு 5 லாலிபாப் அல்லது அதற்கு பின்னர் வெளிவந்த பதிப்புக்களில் நிறுவி பயன்படுத்தலாம்.தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top