கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் கூகுள் தனது அதிவேக இலவச இணைய இணைப்பை "மும்பை ரயில் நிலைய" பயணிகளுக்கு வழங்கியிருந்தது

இந்திய ரயில் நிலையம் கூகுள் வை-பை


இதனுடன் சேர்த்து போபால், புவனேஸ்வர், எர்ணாகுளம், கச்சிக்குடா, புனே, ராய்ப்பூர், ராஞ்சி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய மேலும் 9 இரயில் நிலையங்களுக்கு கூகுளின் அதிவேக இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த ரயில் நிலையங்களின் ஊடாக அன்றாடம் 1.5 மில்லியன் மக்கள் தங்களின் பயணங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


கடந்த வருடம் சுந்தர் பிச்சையின் இந்திய விஜயத்தின் போது அடுத்த வருடம் இந்தியாவின் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை இணைப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய ரயில்டெல் நிறுவனத்துடன் கூகுள் இணைந்து முன்னெடுத்துவரும் இந்த திட்டமானது மிகவிரைவில் ஏனைய ரயில் நிலையங்களையும் உள்வாங்கும் என எதிர்பார்க்கலாம்.

கூகுள் இலவச அதிவேக வை-பை ரயில் நிலையம்
இதுவரை கூகுளின் அதிவேக இலவச இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ள முதல் 10 இரயில் நிலையங்களையும், இதன் பின் வழங்கப்படவுள்ள ஏனைய 90 இரயில் நிலையங்களையும் படத்தில் காணலாம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top