அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் எல்.ஜி ஜி5 போன்ற ஸ்மார்ட் போன்களில் தொடர்ச்சியாக இயங்கும் திரை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆண்ட்ராய்டு Glance


அதாவது எமது ஸ்மார்ட்போனின் திரை இயங்காமல் அணைக்கப்பட்டிருக்கும் சந்தர்பங்களிலும் கூட அதன் திரை மூலம் நேரம், திகதி, மற்றும் நோட்டிபிகேஷன் போனவற்றை கண்காணிப்பதற்கான வசதியே அதுவாகும்.


இந்த வசதியை எந்த ஒரு ஸ்மார்ட்போனிலும் பெற்றுக்கொள்ள உதவுகிறது Glance எனும் செயலி. இதனை கீழுள்ள இணைய சுட்டி மூலம் நிறுவிக் கொள்ளலாம்.


பின்னர் இந்த செயலியை திறந்து உங்கள் ஸ்மார்ட் போனின் திரை அணைக்கப்பட்ட பின்னர் தோன்ற வேண்டிய கடிகாரத்தின் தோற்றம், அதன் அமைவிடம், அதில் தோன்ற வேண்டிய பின்புலப்படம் போன்றவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தெரிவு செய்துகொள்ளலாம்.
அத்துடன் இந்த செயலியின் இறுதியில் தரப்பட்டுள்ள Screen timeout என்பதை 120 Sec வரை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

திரை அணைக்கப்பட்ட பின்பும் இயங்குவதால் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியின் சக்தி வழமையை விட சற்று அதிகமாக செலவிடப்படும் என்பது ஒரு கசப்பான உண்மையாகும். தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top