உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை எப்பொழுதும் ஒரே தோற்றத்தில் பார்ப்பதால் சலிப்பு ஏற்பட்டு விட்டதா?

ஆண்ட்ராய்டு கோ லாஞ்சர் (GO Launcher)


எமது ஸ்மார்ட்போனுக்கு புதுப்புது தோற்றங்களை வழங்கிக்கொள்ள உதவுகிறது அவற்றுக்கான லாஞ்சர் செயலிகள்.


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏராளமான லாஞ்சர் செயலிகள் உள்ளன அவற்றுள் அனைத்தும் சிறந்தவைகள் என கூற முடியாது.

அவ்வாறான லாஞ்சர் செயலிகளுள் கோ லாஞ்சர் எனும் செயலியும் ஒன்றாகும், 100 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியானது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் வழமையான தோற்றத்தை மாற்றியமைத்து ஒரு புதிய தோற்றத்தை வழங்கிக் கொள்ள உதவுகிறது. இதன் அண்மைய பதிப்பை கீழுள்ள சுட்டி மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.


கோ லாஞ்சர் (GO Launcher) செயலியின் சிறப்பம்சங்கள்:

உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை மறைப்பதற்கு மேலதிகமாக செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை ஏனையவர்களின் கண்களில் இருந்து தேவையான செயலிகளை மறைப்பதற்கான வசதி இந்த லாஞ்சர் செயலியிலேயே தரப்பட்டுள்ளது. மேலும் App Lock எனும் பகுதி மூலம் குறிப்பிட்ட ஒரு செயலியை ஏனையவர்களால் திறக்க முடியாதவாறு Pattern Lock இட்டுக்கொள்ளவும் முடியும்.அத்துடன் புதிய கோப்புறைகளை உருவாக்கி அவற்றில் ஒரே வசதிகளை தரக்கூடிய செயலிகளை இடுவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.மேலும் செயலிகள் நிறுவப்பட்டுள்ள மெனு பகுதியில் உங்கள் விரலை மேலிருந்து கீழ் நோக்கி நகர்த்துவதன் மூலம் உங்களுக்குத் தேவையானவற்றை உடனுக்குடன் தேடிப்பெருவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு இந்த பகுதி மூலம் நீங்கள் Go எனும் குறிச்சொல்லை இட்டு தேடினால் Go என்ற எழுத்துக்களை கொண்ட செயலிகள், தொலைபேசி இலக்கங்கள், குறுஞ்செய்திகள், இசைகள்/பாடல்கள் போன்ற அனைத்தையும் ஒரே நேரத்தில் தேடிப்பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய இடுகை:


இது தவிர உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை பக்கம் பக்கமாக பார்ப்பதற்கான வசதியும், மேலிருந்து கீழாக பார்பதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. இதில் உங்களுக்குத் வசதியான முறையை தெரிவுசெய்து கொள்ளலாம்.மேலும் உங்கள் ஸ்மார்ட் போனின் ஹோம் ஸ்க்ரீன் அல்லது மெனு பகுதியில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னுமொரு பக்கத்திற்கு செல்லும்போது அழகிய அனிமேஷன் விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.
இந்த செயலிக்கு என தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ள கோ ஸ்டோர் (Go Store) மூலம் பல கண்கவர் தோற்றங்களை தரவிறக்கி அவற்றை உங்கள் ஸ்மார்ட்போனிற்கு இட்டுக்கொள்ளவும் முடியும்.

இவைகள் தவிர மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top