வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு வாட்ஸ்அப் சேவை இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


வாட்ஸ்அப் உருவானது எப்படி?


எனவே மாதாந்தம் ஒரு பில்லியன் பயனர்களால் பயன்படுத்தும் அளவுக்கு மிக வேகமாகவும் பாரிய அளவிலும் வளர்ந்துவிட்ட இந்த சேவை பற்றி நாம் அறிய வேண்டிய பல தகவல்கள் பின்வருமாறு.


வாட்ஸ்அப் என்ற பெயர் தோன்ற காரணம் என்ன?


ஆங்கிலத்தில் சுகம் விசாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் What's Up என்ற சொல்லின் ஒலிப்பு முறைக்கு அமைவாக WhatsApp எனும் பெயர் உருவாக்கப்பட்டது.


வாட்ஸ்அப் சேவையை உருவாக்கியது யார்?


இது 2009 ஆம் ஆண்டு ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகிய இருவர்களால் இது உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் ஏற்கவே பணி புரிந்தவர்கள். இவர்கள் யாஹூ நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பேஸ்புக் நிறுவனத்தில் பணி புரிவதற்காக விண்ணப்பித்திருந்தனர். எனினும் அது பேஸ்புக் நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டது.


இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட இருவராலும் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் சேவையை பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க வேண்டியிருந்தது. 

இந்த சேவை மூலம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்கிறதா?


2009 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு முதல் ஆண்டு இலவசமாகவும் பின்னர் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆண்டுக்கும் 0.99 அமெரிக்க டொலர் கட்டணம் வசூலித்து வந்தது. 

எனினும் இது 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதன் பயனர்களிடம் எவ்வித கட்டணங்களையும் வசூலிக்காமல் முற்றிலும் இலவசமாக பயன்படுத்துவதற்கான வசதியை வாட்ஸ்அப்  நிறுவனம் வழங்கியது.

எனவே தற்பொழுது எந்த ஒரு வருமானமும் இன்றியே இது இயங்கி வருகிறது. என்றாலும் எதிர்காலத்தில் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.

இதனை எந்த சாதனங்களில் பயன்படுத்த முடியும்.


இந்த சேவையை ஆண்ட்ராய்டு, ஐபோன், பிளாக்பெர்ரி, நோக்கியா போன்ற கையடக்க சாதனங்கள் உட்பட இணைய உலாவியை பயன்படுத்தி நேரடியாக கணினி மூலமும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.இவைகள் தவிர வாட்ஸ்அப் தொடர்பான மேலும் பல தகவல்கள் பின்வருமாறு.

  • 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத அறிக்கையின் படி ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
  • வாட்ஸ்அப் மூலம் ஒவ்வொரு நாளும் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட குரல் பதிவுகள் (Voice Message)  பகிரப்படுகின்றன.
  • வாட்ஸ்அப் மூலம் அன்றாடம் 700 மில்லியனுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பகிரப்படுகின்றன.
  • இதில் ஒவ்வொரு நாளும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடியோ பகிரப்படுகிறது.
  • ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் புதிதாக இணைகின்றனர்.
  • வாட்ஸ்அப் சேவையை அதிகளவு பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள் ஆகும்.
  • வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களில் 72 சதவீதமானவர்கள் அன்றாடம் தமது வாட்ஸ்அப் கணக்கை பரிசீலிக்கின்றனர்.
  • வாட்ஸ்அப் பயனர்களால் ஒரு நாளில் சராசரியாக 23 தடவை வாட்ஸ்அப் செயலி பரிசீலிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்.


2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எவ்வித காரணமும் இன்றி வாட்ஸ்அப் செயலி ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. எனினும் பிறகு நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் இணைக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2014 ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப் செயலி நீக்கப்பட்டது. பின்னர் மே மாதம் இறுதிப் பகுதியில் அது மீண்டும் இணைக்கப்பட்டது.


வாட்ஸ்அப் தொடர்பான ஏனைய பயனுள்ள பகிர்வுகள்:
Love to hear what you think!

1 comments:

 
Top