குறைந்த விலையில் 7 அங்குல டேப்லெட் சாதனம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது டேட்டா வைண்ட் நிறுவனம்.

டேட்டா வைண்ட் டேப்லெட்


டேப்லட் பி.சி i3G7 என பெயர் குறிக்கப்பட்டுள்ள இதற்கு 5,999 இந்திய ரூபாய்களாக விலை குறிக்கப்பட்டுள்ளது.குரல் அழைப்புக்களுக்கும் ஆதரவளிக்கும் இது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது.


மேலும் இதன் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு 
  • இன்டெல் 64 பிட் குவாட் கோர் எக்ஸ் 3 பிராசசர்  
  • 1 ஜிபி ரேம் 
  •  2800 mAh பேட்டரி 
  • டூயல் சிம் 
  • VGA கேமரா (Front)
  • 2 மெகாபிக்சல் கேமரா (Back)
  • 188 மில்லிமீட்டர் நீளம், 107 மில்லிமீட்டர் அகலம் x 9.8 தடிப்பு மற்றும் 278 கிராம் எடை
  • வை-பை, ப்ளூடூத் 4.1 வசதிகள் 


இன்டெல் ப்ராசசரை அடிப்படையாகக் கொண்டு டேட்டா வைண்ட் அறிமுகப்படுத்தும் முதல் டேப்லெட் சாதனம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top