ஒரு சந்தர்பத்தில் எமது வங்கிக்கணக்கு தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள நாம் குறிப்பட்ட வங்கியையே நாடவேண்டி இருந்தது.


இலங்கை கொமர்ஷல் வங்கி


என்றாலும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த யுகத்தில் அது போன்ற தடைகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டுள்ளன என்றே கூறவேண்டும்.


அந்தவகையில் எமது கைக்குள் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே எமது வங்கி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான வசதிகள் இன்று புழக்கத்துக்கு வந்துவிட்டன.

இதனடிப்படையில் இலங்கையில் இருக்கும் பிரபல தனியார் வங்கிகளுள் ஒன்றான கொமர்ஷல் வங்கி கணக்கின் மூலம் நாம் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்களை மிக இலகுவாகவும் விரைவாகவும் அறிந்து கொள்ள உதவுகிறது ComBank ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி

நாம் கீழே வழங்கியிருக்கும் சுட்டி மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நிறுவிக்கொள்ளலாம்.


கொமர்ஷல் வங்கியில் வங்கிக் கணக்கொன்றை வைத்திருப்பவரால் முற்றிலும் இலவசமாகவே இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனின் குறிப்பிட்ட செயலியில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு ComBank (CBC) செயலியில் உள்ள ePassbook வசதியை பயன்படுத்துவதற்கான இரகசிய இலக்கத்தை கேட்க வேண்டும்.

இனி அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் உங்களுக்கான இரகசிய இலக்கம் எஸ்.எம்.எஸ் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.பின்னர் குறிப்பிட்ட செயலியில் ePassbook எனும் பகுதிக்கு சென்று உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும், உங்களுக்கு அனுப்பப்பட்ட இரகசிய இலக்கத்தையும் உள்ளிடுவதன் மூலம் உங்கள் வங்கிக்கணக்கு தொடர்பான அத்தனை விடயங்களையும் குறிப்பிட்ட செயலி மூலமே அறிந்துகொள்ள முடியும்.
இது தவிர கொமர்ஷல் வங்கியின் நிகழ்நேர நாணய மாற்று விகிதம், கொமர்ஷல் வங்கி கிளைகளின் வரைபடம் மூலமான அமைவிடங்கள், உட்பட மேலும் பல விடயங்களையும் இந்த செயலி மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே நீங்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அதேநேரம் கொமர்ஷல் வங்கி கணக்கொன்றையும் வைத்திருப்பவர் எனின் நீங்களும் இதனை பயன்படுத்தி பயன்பெறலாம்.Love to hear what you think!

2 comments:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இதன் முலம் நான் முதன் முறையாக தமிழே எழுத தொியாமல் இருந்த எனுக்கு இது முதல் முறை நன்றி!

    பதிலளிநீக்கு

 
Top