குறிப்பிட்ட ஒரு கணினி தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்வதற்கு CPU-Z எனும் மென்பொருள் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அதேபோல் இன்று அனைவரது கைகளிலும் வலம்வரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொடர்பான அத்தனை தகவல்களையும் விலாவாரியாக அறிந்துகொள்ள உதவுகிறது இந்த CPU-Z எனும் ஸ்மார்ட்போன்களுக்கான செயலிஇந்த செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் தொடர்பான பின்வரும் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

பிராசசர்:
 • உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ராசசரின் வகை அதன் வேகம்.
 • அதில் உள்ள சி.பி.யு க்களின் எண்ணிக்கை 


ஸ்மார்ட்போன் தொடர்பான விபரம்:
 • உங்கள் ஸ்மார்ட்போனை தயாரித்த நிறுவனம்
 • அதன் வகை 
 • அதன் திரையின் அளவு 
 • உங்கள் ஸ்மார்ட்போனின் நிறை 
 • அதன் ரேம் (RAM)  நினைவகம் 
 • பயன்படுத்தாமல் இருக்கும் ரேம் (RAM) நினைவகத்தின் அளவு, அதன் சதவீதம்.
 • அதன் உள்ளக நினைவகம்
 • பயன்படுத்தப்படாமல் மீதமிருக்கும் நினைவகத்தின் அளவு, அதன் சதவீதம்.
இயங்குதளம்:
 • நிறுவப்பட்டிருக்கும் இயங்குதளத்தின் பதிப்பு 
 • அது ரூட் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா?
 • உங்கள் ஸ்மார்ட்போன் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரம்.


பேட்டரி:
 • உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியின் வலு.
 • அதில் மீதமிருக்கும் சக்தியின் சதவீதம்
 • பேட்டரியின் வெப்பம் 


இவைகள் தவிர உங்கள் ஸ்மார்ட்போன் தொடர்பான இன்னும் பல பயனுள்ள தகவல்களையும் இந்த செயலி மூலம் அறிந்கொள்ள முடியும்.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top