அழைப்புக்களை மேற்கொள்வதற்கு மாத்திரமின்றி இன்று பலரும் பல்வேறு தேவைகளுக்கு தமது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.


Bluelight Filter Android Application


அந்த வகையில் இரவு நேரங்களில் அதாவது இருள் சூழவுள்ள நேரங்களில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களும் உண்டு. (இதனை கூறும் நானும் அப்படித்தான்)


எனவே இது போன்று இரவு நேரங்களில் நாம் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் அதன் திரையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது நேரடியாக எமது கண்களை வந்தடைகின்றது.

இதனால் நாம் சந்திக்கும் பிரச்சினைகளோ ஏராளம் ஒற்றை தலைவலி, தூக்கமின்மை என பல்வேறு கசப்பான அனுபவங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே ஸ்மார்ட்போன்களின் திரையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தி அதில் இருந்து ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள உதவுகிறது Bluelight Filter எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி (தரவிறக்குவதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது)


வெறும் 1.6 MB அளவையே கொண்டுள்ள இந்த செயலியை தரவிறக்குவதும் பயன்படுத்துவதும் மிக இலகு.

திரையில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தை கூட்டிக் குறைப்பதற்கான வசதி இந்த செயலியின் பிரதான இடைமுகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Bluelight Filter Android


அதேநேரம் இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் கண்களுக்கு ஏதுவான பின்புல வர்ணத்தை கொண்டமையும் படியும் உங்கள் ஸ்மார்ட் போனின் திரையை அமைத்துக்கொள்ளலாம்.

மேலும் இந்த செயலியுடன் Bluelight Filter - Schedule எனும் செயலியையும் உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிக்கொள்வதன் மூலம் நேரத்துக்கு நேரம் தானாகவே இதனை இயங்கச்செய்யவும் முடியும்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top