டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூபா 50 க்கு 20 ஜிபி டேட்டா வழங்குவதாக அண்மையில் சமூக வலைதளங்களின் ஊடாக தகவல்கள் பரவி வந்தது.

பி.எஸ்.என்.எல் டேட்டா


எனினும் இதில் எந்த உண்மையும் இல்லை. இது முற்றிலும் போலியான தகவல் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை படுத்தல் பிரிவின் பொது முகாமையாளரான சஞ்சய் குமார் இது பற்றி தெரிவிக்கும் போது "இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்றே எமக்குத் தெரியாது, எம்மிடம் அவ்வாறான திட்டங்களும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.


எனவே இந்த போலியான தகவலை நம்பி இந்த சலுகையை பெறுவதற்காக நீங்கள் ஏனைய வலையமைப்புக்களில் இருந்து பி.எஸ்.என்.எல் வலையமைப்புக்கு மாற முயற்சித்திருந்தால் அந்த முயற்சியை கைவிடுவதே சிறந்தது.

Love to hear what you think!

1 comments:

 
Top