ஏப்ரல் 1 ஆம் திகதி முட்டாள்களின் தினம் என கருதப்பட்டு வருவதால் வருடாவருடம் கூகுள் நிறுவனமும் ஏதாவது கேலியான விடயங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதுண்டு.

முட்டாள் தினம் கூகுள் நிறுவனம்


ஆனால் இவ்வருடமோ கூகுள் நிறுவனத்திற்கு அது தலைகீழாக மாறிவிட்டது.


மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அதன் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் "மைக் டிராப்" (Mic Drop) எனும் புதியதொரு அம்சத்தை சேர்த்தது.


இது புதிய ஜிமெயில் ஒன்றை உருவாக்கும் சாளரத்தின் இடது கீழ் மூலையில் இருக்கும் Send பட்டனுக்கு அடுத்தபடியாக வழங்கப்பட்டிருந்தது.


முட்டாள் தினம் ஜிமெயில்


அந்த "மைக் டிராப்" (Mic Drop) பட்டனை அழுத்தி மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் போது அதனுடன் மைக்ரோபோனை கீழே விடும் வகையில் ஒரு அனிமேஷன் படமும் சேர்த்து அனுப்பப்படும். அது அவமதிப்பை வெளிப்படுத்துவதாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டது.


கூகுள் முட்டாலனது


எனவே மின்னஞ்சல் சேவையை இன்று பலரும் தமது வணிக நடவடிக்கைகளுக்கா பயன்படுத்தி வருவதால் இவ்வாறு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களால் தமது உயர் அதிகாரிகளிடம் பலரும் அவப்பெயருக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒருவர் தமது வேலையையும் கூட இழந்திருப்பதாக Gmail Help Forum பக்கத்தில் பகிர்ந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

எனவே இந்த அம்சத்தை கூகுள் உடனடியாக தனது ஜிமெயில் சேவையில் இருந்து நீக்கியதுடன் "முட்டாள்கள் தினத்தில் தம்மை தாமே முட்டாளாக்கிக் கொண்டதாகவும், மக்களை சிரிக்க வைப்பதற்கு பதிலாக தலைவலியையே ஏற்படுத்தியிருப்பதாகவும் கூகுள் அதன் உத்தியோக பக்கத்தில் தன்னைத்தானே நொந்துக் கொண்டது. 

அத்துடன் இந்த துரதிஷ்டவசமான அம்சத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பும் கோரியுள்ளது கூகுள் நிறுவனம்.

எது எப்படியோ  "நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன, ஆனால் அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது" எனும் பில்கேட்சின் கூற்றுக்கமைய இதிலிருந்து கூகுள் ஒரு பாடத்தை  கற்றிருக்கும்  என உறுதியாக கூற முடியும்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top