கூகுள் தரும் சேவைகளுள் கூகுல் கீப் எனும் சேவையும் ஒன்றாகும்.எமக்குத் தேவையானவற்றை குறித்துக் கொள்ளவும் அவற்றை தேவையான நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளவும் இது மிகவும் துணை புரிகிறது.


இதனை உங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தி https://keep.google.com எனும் தளத்தின் ஊடாக பயன்படுத்திக்கொள்ள முடிவதுடன் ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கான செயலிகளை நிறுவி ஸ்மார்ட்போன்கள் மூலமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் ஸ்மார்ட் போன் மூலம் பயன்படுத்துபவர் எனின் கூகுளின் கூகுள் நவ் எனும் குரல் கட்டளை வசதியை பயன்படுத்தி எமது குரல் மூலம் தேவையான குறிப்புக்களை கூகுள் கீப் சேவையில் உள்ளிட்டுக் கொள்ளவும் முடியும்.

இதற்கு கூகுள் கீப் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவியிருக்க வேண்டும் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிக்கொள்ளலாம்.

குரல் மூலம் கூகுள் கீப் சேவையில் தேவையானவற்றை பதிவது எப்படி?

இனி நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள  வேண்டிய பொருட்களை இதில் உள்ளிட வேண்டும் எனின்  "OK Google" என்பதன் மூலம் கூகுள் செயலியை திறந்த பின்னர் Add என்பதுடன் ஞாபகப்படுத்த வேண்டிய பொருளையும் அந்த பட்டியலின் தலைப்பையும் குறிப்பிட வேண்டும்.


தொடர்புடைய இடுகை:உதாரணத்திற்கு கடையில் வாங்க வேண்டிய பால், சீனி, போன்றவற்றை குரல் கட்டளையை பயன்படுத்தி கூகுள் கீப் செயலியில்  உள்ளிட வேண்டும் எனின் "OK Google" என்பதன் மூலம் கூகுள் செயலியை திறந்த பின்னர் Add Milk and Sugar to shopping list என கூறலாம். இனி கூகுள் கீப் செயலியில் Shopping எனும் பெயரில் பால், சீனி போன்ற பொருட்களின் பட்டியல் உடனடியாக உருவாக்கப்படும்.
கூகுள் கீப் சேவையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பட்டியலை குரல் கட்டளை மூலம் திறப்பது எப்படி?


அதேபோல் கூகுள் கீப் செயலியில் இருக்கும் ஒரு பட்டியலை திறந்துகொள்ள "Open என்பதுடன் குறிப்பிட்ட பட்டியலின் பெயரை குறிப்பிட்டு இறுதியில் List என கூறுவதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பட்டியலை திறந்துகொள்ள முடியும்.

உதாரணத்திற்கு Vacation எனும் பெயரில் கூகுள் கீப் செயலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பட்டியலை திறந்துகொள்ள  "Open Vacation list" என கூறலாம் இதன் போது  Vacation எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பட்டியல் திறக்கப்படும்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top