இணையத்தில் தகவல்களை தேடுவதற்கென அன்று முதல் இன்று வரை பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு தேடல் இயந்திரம் என்றால் அது கூகுள் தேடு இயந்திரம்  என்றே கூறவேண்டும்.

கிரிக்கட் ஸ்கோர் விபரம்


வெறும் தகவல்களை தேடித்தருவதுடன் மாத்திரம் நின்றுவிடாது அதற்கும் அப்பாற்பட்டு இன்னும் ஏராளமான வசதிகளை கூகுள் தேடியந்திரம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.அந்தவகையில் தற்பொழுது சூடு பிடித்திருக்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண  கிரிக்கட் போட்டிகளின் ஸ்கோர் விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான வசதியையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் கூகுள் தேடியந்திரத்தில் cricket score  அல்லது t20 score என்று தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் உடனுக்குடனான ஸ்கோர் விபரங்களை கூகுள் முகப்புப்பக்கத்தின் மூலமே அறிந்துகொள்ளலாம்.
எனவே இனி cricket score என மீண்டும் மீண்டும் கூகுள் தேடியந்திரத்தில் தட்டச்சு செய்து தேடவேண்டிய அவசியம் இல்லை.

இந்த வசதியை தற்பொழுது ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

1 comments:

 
Top