செல்பி பிரபலமாகிவிட்ட இன்றைய நிலையில் செல்பி புகைப்படங்களை பிடிப்பதற்கென ஏராளமான செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

செல்பி செயலி
Add caption

 அட்டகாசமான செல்பி எடுக்க MSQRD செயலி 


செல்பி புகைப்படங்களை பிடிப்பதற்கென ஏராளமான செயலிகள் இருந்தாலும் கூட MSQRD எனும் செயலியானது சற்று வித்தியாசமான கோணத்தில் செல்பி புகைப்படங்களை பிடிக்க உதவுகிறது.

இதனை பயன்படுத்தி நீங்கள் செல்பி புகைப்படங்களை பிடிக்கும்போது உங்களின் முகத் தோற்றத்திற்கு பதிலாக வெவ்வேறு தோற்றங்கள் பிரதியிடப்படுகின்றது.


உங்கள் முகத்திற்கு பதிலாக ஏனையவர்களின் முகத் தோற்றங்களும் புலி, கரடி போன்றவற்றின் முகத் தோற்றங்களும் இதில் தரப்பட்டுள்ளன.

MSQRD android


இதனை பயன்படுத்தி செல்பி புகைப்படங்களை மாத்திரமல்லாது வீடியோ காட்சிகளையும் பதிவு செய்ய முடியும்.


MSQRD android ios app


புகைப்படங்களை பிடிக்கும் போதும் வீடியோ கோப்புக்களை பதிவுசெய்யும் போதும் உங்கள் முகத்திற்கு பதிலாக பிரதியிடப்படும் ஒவ்வொரு முகத் தோற்றமும் உங்கள் முகத்தில் ஏற்படும் ஒவ்வொரு அசைவுகளையும் மெய் நிகராக எடுத்துக் காட்டுகின்றமை இதன் விசேட அம்சமாகும்.

இது ஐபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களிலேயே ஐபோன் பயனர்களிடையே பிரபலமானதுடன் App Store இல் 5 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றது.

இந்த நிறுவனத்தை தற்பொழுது பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த செயலியில் மேலும் பல புதிய மாற்றங்களை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.
தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top