அதிகமான பயனர்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் சேவைகளுள் வைபர் சேவையும் ஒன்றாகும்.

வைபர் தமிழ் ஸ்டிக்கர்


ஏனையவர்களுடன் எமது எண்ணங்கள் கருத்துக்களை பகிரும் போது வார்த்தைகளால் கூற முடியாத பலவற்றை புகைப்படங்கள், இமொஜி, ஸ்டிக்கர் போன்றவற்றின் மூலம் கூறிவிட முடியும்.


எனவே இன்று இமொஜி, ஸ்டிக்கர் போன்றவைகள் இல்லாத ஒரு மெசேஜிங் சேவையே இல்லை என கூறும் அளவுக்கு அனைத்து மெசேஜிங் சேவைகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றை எமது தாய் மொழியிலேயே பகிர்ந்து கொள்ள முடியும் எனின் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா?


அதற்கான வசதி வைபர் செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஸ்டிக்கர்களை கொண்ட ஸ்டிக்கர் பேக் (Sticker Pack) ஒன்று நெஸ்டமோல்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்களும் வைபர் சேவையை பயன்படுத்துபவர் எனின் அதன் Sticker Market பகுதிக்கு சென்று Sinhala & Tamil New Year என்பதை தெரிவு செய்வதன் மூலம் அதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.

பின்னர் அவற்றை உங்கள் அரட்டைகளில் பயன்படுத்தலாம்.

முகப்புப் பக்கம்: வைபர் 


தொடர்புடைய இடுகைகள்:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top