மின்னஞ்சல் முறைமையை கண்டுபிடித்தவர் "ரே டாம்லின்சன்" என்றும் அவர் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் மரணமடைந்ததால் "மின்னஞ்சல் முறைமையை கண்டுபிடித்தவர் மரணமடைந்துவிட்டார்" என்ற தலைப்புச் செய்தி ஊடகங்களில் வெளிவந்தமையும் நாம் அறிந்த விடயமே.

சிவா அய்யாதுரை


"இருப்பினும் இது தவறான கூற்று" மின்னஞ்சல் முறைமையை கண்டுபிடித்த பெருமை என்னையே சாரும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழ் நாட்டில் பிறந்த "சிவா அய்யாத்துரை என்பவர்."இது தொடர்பில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது. 

"தான் இதனை தனது 14 ஆவது வயதில் கண்டுபிடித்ததாகவும் மின்னஞ்சலுக்கான மென்பொருளை நானே உருவாக்கினேன் என்றும் அதற்கு "Email" என நானே பெயர் சூட்டியதாகவும், அதற்கு முன் கணினிகளுக்கிடையில் நேரடியாக எழுத்துக்களில் அமைந்த தகவல் பரிமாற்று முறையொன்று  இருந்ததாகவும் அதையே "ரே டாம்லின்சன்" கண்டு பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன/நிற துவேசம் காரணமாக இதனை ஊடகங்கள் மறைத்துவிட்டதாகவும் "மின்னஞ்சல் முறைமைக்கான காப்புரிமை தன்னிடமே இருப்பதாகவும். ஆனால் அதற்கு இன்னும் முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மை, நீதியின் தினம். உண்மைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். என தெரிவித்துள்ள இவருக்கு தமது ஆதரவை பலரும் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் பிறந்த இவர் தனது தனது ஏழாவது வயதில் குடுபத்துடன் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top